வெள்ளி, 30 அக்டோபர், 2009

ஈழத் தமிழர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்: இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்



மேடையில் ஆர். நல்லகண்ணு, கோ.க. மணி, தா. பாண்டியன், ராமதாஸ், பழ. நெடுமாறன், வைகோ, சி. மகேந்திரன்
திருச்சி, அக். 29: இலங்கையில் முள் வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களை விடுவிக்க வலியுறுத்தி, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நான்கு ஊர்களிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பிரசார பயணத்தின் நிறைவாக, திருச்சி புத்தூர் நான்கு சாலை சந்திப்பில் வியாழக்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு திருச்சி மாநகர் மாவட்ட மதிமுக செயலர் அ. மலர்மன்னன் தலைமை வகித்தார். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ச. ராமதாஸ், மதிமுக பொதுச் செயலர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர். நல்லகண்ணு, மாநிலச் செயலர் தா. பாண்டியன், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் கோ.க.மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஈழத்தில் பருவமழை தொடங்கி பெரும் ஆபத்துக்கான அபாயம் எழுந்துள்ளது. இந்தச் சூழலில் முள் வேலி முகாம்களில் உள்ளவர்களை எவ்வித நிபந்தனையுமின்றி விடுவிக்க வேண்டும். இதற்குரிய அனைத்து நிர்பந்தங்களையும் இந்திய அரசு இலங்கை அரசுக்கு தர வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை இதற்கான அனைத்து அழுத்தங்களையும் இந்திய அரசுக்கு கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கருத்துக்கள்

குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிராமல் தமிழகத்திற்கு வெளியேயும் சென்று பரப்புரை மேற்கொள்ள வேண்டுகிறேன். ஈழத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் எனப் பெயரை மாற்றிக் கொண்டு உங்களின் நம்பகத் தன்மையை மெய்ப்பிக்க வேண்டுகிறேன். தமிழ் ஈழம் தமிழர் தாயகம் என்னும் கருத்தை உணர்த்தி தமிழ் ஈழ ஏற்பை உலகநாடுகளில் பெற்றுத் தர போராட வேண்டுகின்றேன். வெல்க தமிழ் ஈழம்! வளர்க ஈழ-உலக உறவு! வாழ்க தமிழ்த் தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/30/2009 2:39:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக