இலங்கை ராணுவம் கொத்துக் குண்டுகளைப் பாவித்ததே இல்லையாம்!
இலங்கை ராணுவத்தினர் கொத்துக் குண்டுகள் போன்ற மனிதத் தன்மையற்ற ஆயுதங்களை ஒருபோதுமே யுத்தத்தின்போது பயன்படுத்தவில்லை என்று கூறியுள்ளார் ராணுவத்தின் தற்போதைய தளபதி லெப்டினண்ட் ஜெனெரல் ஜகத் ஜயசூரிய. போரின் கடைசிக் கட்டத்தில் ராணுவத்தினர் இவ்வாறான ஆயுதங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று குறிப்பிட்ட சில கட்சிகள் பிரச்சாரம் செய்து ராணுவத்தினதும், அரசாங்கத்தினதும் மரியாதையைக் குறைக்க முயற்சித்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெறுகின்ற நிலக்கண்ணிவெடிகள் மற்றும் வெடிபொருட்கள் குறித்த சர்வதேச சட்டம் என்ற கருத்தரங்கில் உரையாற்றிய வேளையிலேயே ராணுவத் தளபதி இவ்வாறு சொன்னார். மேலும், இலங்கை ராணுவத்தின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக என கண்ணிவெடிகள் கடுமையாக வரம்பிடப்பட்டுள்ளதாகவும் அதுவும் தெளிவாகக் குறிப்பிட சில பகுதிகளிலேயே அனுமதிக்கப்பட்டது எனவும் கூறியுள்ளார்.
இவ்வறிவித்தலை அவர் கூறும் போது மாநாடு நடைபெற்ற மண்டபத்தில் பலர் நகைத்ததாக அதிர்வின் நிருபர் கொழும்பில் இருந்து கூறினார்.
Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 3063
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக