புதன், 28 அக்டோபர், 2009

மாவீரர்களான லெப்.கேணல்.கஜன், கப்டன்.நாதன் நினைவு வணக்க நிகழ்வு

27 October, 2009 by admin

தாயக விடுதலைக்காக புலம்பெயர் நாடுகளில் பணிபுரிந்து வீரச்சாவை அணைத்துக்கொண்ட மாவீரர்களான லெப்.கேணல்.கஜன், கப்டன்.நாதன் ஆகியோரின் வணக்க நிகழ்வு பிரான்சின் புற நகர்ப்பகுதியான லா குறுனோவ் எனும் இடத்தில் அமைந்துள்ள அவர்களது கல்லறையில் நேற்று (26.10.2009) திங்கட்கிழமை நடைபெற்றது.
நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட நிகழ்வில் ஈகைச்சுடரினை கப்டன் கஜன் அவர்களின் சகோதரர் ஏற்றிவைக்க, அதனைத் தொடர்ந்து வணக்க நிகழ்வுகள் நடைபெற்றது.

நினைவுரைகளை பிரான்சு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு பொறுப்பாளர் திரு.பாலசுந்தரம் அவர்களும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு.சத்தியதாசன் அவர்களும் ஆற்றினர்.

நிகழ்வில் மாவீரன் கப்டன் கஜன் எழுதிய


மதிப்புக்குரிய மாமனிதர்களே
உங்கள் தடங்களில்
ஒன்றா இரண்டா
இல்லை இல்லை
ஒரு தேசமே
அணிவகுத்துக்கொள்கிறது
உங்கள்
கல்லறை வரிகளை உச்சரித்துக்கொண்டு.
நாளை
புதுயுகம் பிறக்கும்
சுழலும் புயற் காற்றில்
நம்பிக்கை நாற்றுக்களின்
வேர்களும் எழுச்சி பெறும்.

எனும் கவிதையோடு நிகழ்வு நிறைவு பெற்றது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக