வியாழன், 29 அக்டோபர், 2009

திமுக எதிர்ப்பு கூட்டம் ஒத்திவைப்பு



சென்னை, அக். 28: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை தொடர்பாக, மதுரையில் நவம்பர் 1-ம் தேதி நடத்துவதாக அறிவித்திருந்த எதிர்ப்பு பொதுக் கூட்டத்தை ஒத்திவைப்பதாக திமுக அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணைக்கு அருகே புதிய அணை கட்டுவதற்கு ஆய்வு நடத்த கேரளத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது. இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. "முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் மத்திய இணையமைச்சர் ஒருவரின் செயல்பாடுகளைக் கண்டித்து மதுரையில் நவம்பர் 1-ம் தேதி கண்டனக் கூட்டம் நடைபெறும்' என்று முதலில் அறிவித்தது. ஓரிரு நாளில் இந்தக் கண்டனம் கூட்டம் எதிர்ப்புக் கூட்டமாக மாறியது. "முல்லைப் பெரியாறு அணைக்கு அருகே புதிய அணை கட்டும் கேரள அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுக் கூட்டம்' என அறிவிக்கப்பட்டது. கூட்டமும் இல்லை... இந்த நிலையில், அந்த எதிர்ப்புக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து, அக்கட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ""முல்லைப் பெரியாறு புதிய அணை தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கில் இப்போதுள்ள முல்லைப் பெரியாறு அணை உறுதியாக இருக்கிறது எனவும், புதிய அணை கட்டத் தேவையில்லை எனவும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தின் முன் எடுத்து வைத்து வாதாடி வருகிறது. மத்திய அரசின் வழக்கறிஞரும் இந்த வழக்கு விசாரணையில் கலந்து கொண்டு, ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணை உறுதியாக உள்ளது என கூறியிருப்பதையே இப்போதும் வலியுறுத்துவதாக எடுத்துரைத்துள்ளார். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதைக் கருத்தில் கொண்டு, மதுரையில் நவம்பர் 1-ம் தேதி நடத்துவதாக திட்டமிட்டு இருந்த பொதுக் கூட்டத்தை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது'' என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

தலைப்பின்படிப் பார்த்தால் திமுகவிற்கு எதிர்ப்பான கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக அல்லவா பொருள் வருகிறது. யாரோ அரைவேக்காட்டு கோவன்கள் கூட்டம் நடத்துவதாக இருந்து அது ஒத்திவைக்கப்பட்டது போலும் எனப் படிப்போர் எண்ண மாட்டார்களா? உண்மையில் செய்தியைப் பார்த்தால் அரை வேக்காட்டைக் கதாநாயகனாகக் கருதி அடிமைகள் (முதல்வர் அப்படித்தானே கூறினார்!) ஒத்தி வைத்தாக அல்லவா உள்ளது?

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/29/2009 2:25:00 AM

VALGA E.V.K.S,ELENKOVAN ORU PODU POTTALUM POTTAR PAVAR CONGRESS DAYAVIL KALAM TALLUM TIRUVARUR MU KA YINDA ALAVIL BAYANDUVITTARAY

By A.H.NATANAGOPALAN3
10/29/2009 1:54:00 AM

தமிழீழப் பிரச்சனையில் மட்டுமல்ல, தமிழ்நாட்டு பிரச்சனையிலும் அந்தர் பல்டி அடிப்பதில் தமிழினத் தலைவர், தன்மான சிங்கம், முதல்வர், முத்தமிழ்அறிஞர் கலைஞர் மகத்தான சாதனை செய்துள்ளார். இப்படி பல பல்டிகள் அடித்து தமிழர்களின் தன்மானத்தைக் காற்றில் பறக்கவிடும் கலைஞருக்கு பல்டிநாயகன் விரைவில் பட்டம் வழங்க ஏற்பாடுகள் செய்வோம்.

By தமிழ்க்கனல்
10/29/2009 1:22:00 AM

எதிர்ப்பு கூட்டத்தை ஒத்தி வைத்தது போல் இனி மேல் முல்லை பெரியார் அணை விவகாரம் பற்றி இப்போதும், இனி எப்போதும், பேசப் போவதில்லை . அதனை ஒத்தி வைத்து விட்டோம் எனவும் ஒரு அறிவிப்பு செய்து விடுங்கள்.

By Ibnusalih,abudahbi,uae.
10/29/2009 12:57:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக