வியாழன், 29 அக்டோபர், 2009

உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு இலச்சினை



சென்னை, அக். 28: "சர்வதேச தமிழர் பாதுகாப்பு இயக்கம்' சார்பில் நடைபெற உள்ள உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டுக்கான இலச்சினையை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி புதன்கிழமை வெளியிட்டார். இலங்கையில் முள்வேலி முகாம்களில் தமிழர்களில் அவதிப்படும் சித்திரத்துடன் "தமிழராய் எழுவோம்' என்ற வரியுடன் இந்த இலட்சினை உருவாக்கப்பட்டுள்ளது. இலட்சினையை வெளியிட்டு செய்தியாளர்களிடம் கிருஷ்ணசாமி கூறியது: இலங்கைத் தமிழர் பிரச்னையில் இந்திய அரசு நல்லது செய்யும் என்று இனியும் எதிர்பார்க்க முடியாது. உலகெங்கும் உள்ள 10 கோடி தமிழர்களும் ஒன்றுபடாததுதான் பிரச்னைக்கு காரணம். எனவே 2010 பிப்ரவரி 6, 7 தேதிகளில் கோவையில் "உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு' நடைபெறும். இதற்காக "சர்வதேச தமிழர் பாதுகாப்பு இயக்கம்' என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளோம் என்றார் கிருஷ்ணசாமி.
கருத்துக்கள்

தமிழர் பாதுகாப்பு என்பது தமிழ் இனத்தையும் தமிழ் மொழியையும் உள்ளடக்கியது. பிறகு ஏன் சர்வதேசம்?பன்னாடு என்று அழைக்கக் கூடாதா? இனிப்ப ன்னாட்டுத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் எனப் பெயரை மாற்றுங்கள்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/29/2009 2:41:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக