எட்டாவது "தமிழ் இணைய மாநாடு 2009 ஜெர்மனியின் கொலோன் நகரில் கடந்த 3நாட்களாக நடைபெற்று முடிவடைந்தது. இந்தமாநாட்டில் ஒருங்குறி (யுனிகோட்) முறைத் தரத்தையே தரமாக அறிவிக்க அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.இதுவிபரமாவது:-மூன்று நாட்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேலான பேராளர்கள் கலந்துகொண்ட இந்தமாநாட்டில் மொத்தம் 17 தொழில்நுட்பக் கருத்தரங்க அமர்வுகள் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்குகளுக்கு லண்டன் பல்கலை பேராசிரியர்.சிவாபிள்ளை,மலேசியா முரசு அஞ்சல் முத்துநெடுமாறன், வாசு ரெங்கநாதன், முருகையன், கணேசன், சுபாசினி, அச்சுதமேனன், சீதாலட்சுமி, நக்கீரன், ராஜேந்திரன், பாலசந்திரன், அருண்மகிழ்நன், இராமகிருஷ்ணன், இனியநேரு, ஜீன் செவில்லார்ட், பாலசுந்தரராமன் ஆகியோர் தலைமையில் அமர்வுகள்நடைபெற்றது. இந்த அமர்வுகளில் பல்வேறு தலைப்புகளில் தங்கள் ஆய்வறிக்கைகளைச் சமர்ப்பித்துப் பேசினர்.மாநாட்டைச் சிறப்பாக நடத்த உதவிய ஜெர்மனி, கொலோன் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும், அதன் தமிழ்துறை தலைவர் பேராசிரியை.உல்ரிக்கி நிக்கலஸ் அவர்களுக்கும் உத்தமம்(உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்)நிர்வாகிகள் நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர். தமிழ் இணைய மாநாட்டின் நிறைவாக உத்தமத்தின் உறுப்பினர் குழு தமிழ்நாடு,இலங்கை, சிங்கப்பூர்,மலேசியா மற்றும் மொரிசியசு அரசாங்கங்களை கோரும் வகையில் ஒருமனதான தீர்மானங்களை நிறைவேற்றியது. இந்த பரிந்துரைத் தீர்மான விபரங்களாவது: அடுத்த தமிழிணையமாநாடு 1.2010 தமிழ் இணைய மாநாட்டைத் தமிழ் நாட்டில் நடத்துவதற்குப் பரிந்துரைக்கிறது. மாநாட்டை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு மற்றும் வணிக நோக்கமற்ற கல்விக்கழகங்கள், தனியார் மையங்கள், தங்களுடைய ஆர்வத்தை உத்தமத்திடம் தெரிவிக்ககோருதல். ஒருங்குறி(யுனிகோட்)2.ஒருங்குறி(யுனிக்கோட்) முறை தற்பொழுது மின்னியல் ஊடகங்களில் பயன்படுத்தப்படுவதனால், உத்தமம் உத்தமம் ஒருங்குறி முறைத் தரத்தையே தரமாக, அறிவிக்குமாறு தமிழ்நாடு,இலங்கை, சிங்கப்பூர், மலேசியா மற்றும் மொரிசியசு அரசாங்கங்களை கேட்டுக்கொள்கிறது. தகவல் தொழில் நுட்ப இதழ்3. தமிழில் பன்னாட்டுத் தரத்திற்கேற்ற தகவல் தொழில் நுட்ப இதழ் இல்லாமையின் தேவையை உணர்ந்தும், தமிழ்த் தகவல் தொழில் தொழில் நுட்ப அறிஞர்களின் வேண்டுகோளை ஏற்றும், உத்தமம் ஒரு தமிழ்த் தகவல் தொழில் நுட்ப இதழினைத் தொடங்க முன்வந்துள்ளது. இவ்விதழைப் பதிப்பிப்பதற்கும், அதை மேலும் முன் எடுத்துச் செல்வதற்கும் முதலீட்டைத் தந்துதவுமாறு, தமிழ்நாடு,இலங்கை,சிங்கப்பூர்,மலேசியா மற்றும் மொரீசியஸ் அரசாங்கங்களைக் கேட்டுக்கொள்கிறது. உத்தமத்தின் செயலகம் 4. உத்தமத்தின் செயலகம் 2004 வரை, சிங்கப்பூர் அரசு உதவியுடன் சிங்கப்பூரில் செயல்பட்டுவந்தது. மூன்றுவருட சிங்கப்பூர் அரசு உதவி முடிந்ததின் காரணமாக செயலக உதவியின்றி செயலகம் செயல்பட்டுவருகின்றது. உத்தமத்தின் பணிகளுக்கு ஏதுவாக இச்செயலக உதவியை தமிழ்நாட்டில் நிறுவுவதற்கு தமிழ்நாட்டு அரசிடம் கேட்டுக்கொள்கிறது. இச்செயலகம் சிங்கப்பூரில் அமைத்திருந்த உத்தமத்தின் செயலக அமைப்பினை ஒத்திருக்கும். இச்செயலகம் உத்தமத்தின் இயக்குநரின் கீழ் செயல்படும். விருதுகள்5. தமிழ்த் தகவல் நுட்ப முன்னோடிகளின் வணிக நோக்கமற்ற சேவையைக் கருத்திற் கொண்டு அவர்களைக் கெளரவிக்கும் வகையில் விருதுகள் வழங்குவது அவசியம் என மாநாட்டில் அப்ங்குபெற்ற அறிஞர்கள் உத்தமத்திற்குப் பரிந்துரைத்துள்ளனர். உத்தமம் தமிழ்நாடு,இலங்கை,சிங்கப்பூர்,மலேசியா மற்றும் மற்றும் மொரிசியசு அரசுகளை இவ்விருது வழங்கத் தேவையான முதலீட்டினையும் தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறது. புதிய பணிக் குழுக்கள் 6. 2009 தமிழ் இணையப் பேராளர்கள் உத்தமத்திடம் கேட்டுக்கொண்டதற்கிணங்கத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற புதிய பணிக் குழுக்களை அமைக்க பூர்வாங்கப் பணிகளை ஏற்றுக் கொண்டுள்ளது. 1.மொழியாக்கக்(Transliteration) குழு, 2.பன்னாட்டு இணைய முகவரிக்குழு, 3.தமிழ்கற்றல், கற்பித்தல் தரக்குழு, 4.தமிழ் உருபனியல் குழு ஆகிய நான்கு பணிக்குழுக்களை உருவாக்க/உயிர்ப்பிக்க பரிந்துரைக்கிறது. உலகமயமாக்க சிந்தனைகளின் தொடர்பாகவும், புதியவழிச் சிந்தனைகளை தூண்டும் முகமாகவும் பணிக்குழுப் பரிந்துரைகளை உத்தமம் ஏற்று அவற்றை உருவாக்க/உயிர்ப்பிக்க முயற்சிகளை உத்தமம் மேற்கொண்டுள்ளது. ஆகிய ஆறு தீர்மானங்களையும் உத்தமத்தின் உறுப்பினர் குழு ஏகமனதாக நிறைவேற்றியது. மாநாட்டு கருத்தரங்க அமர்வுகளில்மலேசியாவைச் சேர்ந்த முத்து நெடுமாறன் மூன்றாம் தலைமுறையினர்கையடக்கக் கருவிகளில் தமிழில் எழுதவும் படிக்கவும் முடியும் என்பதைவிளக்கிக் காட்டினார், ஐபோன், அன்ட்ரோய்ட், நோக்கியா போன்ற கைத்தொலைபேசிகளில் தமிழ் பென்பொருளைக் கையாளமுடியும் என்பதை மிக விளக்கமாக எடுத்துரைத்ததும்,பெங்களூரு இந்திய அறிவியல் ஆய்வுக்கழகப் பேராசிரியர் தகவல் தொழில்நுட்பம் வழி படிப்பறிவு இல்லாதவர்கள் மற்றும் பார்வையற்றோர் ஆகியவர்களின் வாழ்க்கையில் பெரும்மாற்றத்தைக் கொண்டுவரத்தக்க தொழில்நுட்பத்தை விளக்கியதையும், தமிழ் நூல் வாசகத்தை ஒலி வடிவமாக மாற்றிப் பிழையின்றிப் படிக்கும் கணினியை அவர் காட்டியதும் பேராளர்களை வெகுவாகக் கவர்ந்தது. சர்வதேச பேராளர்கள் சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், தமிழ்நாடு அரசு குழுவின் தலைவருமான அனந்தகிருஷ்ணன், கணித்தமிழ் சங்க தலைவர் ஆண்டோ பீட்டர்,வெங்கட்ரங்கன்,சிங்கப்பூர் மணியம்,கிருஷ்ணன்,பேரா.கலைமணி,சிவக்குமார்,அமெரிக்கா வாசுரெங்கனாதன், கணேசன்,கவியரசன், லண்டன் பல்கலை பேராசிரியர்.சிவாபிள்ளை, சுவிட்சர்லாந்து பேரா.கல்யாணசுந்தரம் உட்பட நூற்றுக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.கொலோன் பல்கலை தமிழ் துறைதலைவர் பேராசிரியை உல்ரிக்கி நிக்கலஸ் இந்தமாநாட்டில் முழுக்கமுழுக்க தமிழில் உரையாற்றியது வெளிநாட்டுப்பேராளர்களை வியக்கவைத்தது. தகவல் மற்றும் படங்கள் : (ஜெர்மனி கொலோன் நகரிலிருந்து) உத்தமம் செயற்குழு உறுப்பினர் சிங்கப்பூர் மணியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக