செவ்வாய், 27 அக்டோபர், 2009

செம்மொழி மாநாடு: பேரறிஞர்கள் வருகையைத் தடுக்க முயற்சி- கருணாநிதிசென்னை, அக். 26: கோவையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு தமிழ் பேரறிஞர்கள் வந்து விடாமல் தடுக்க முயற்சி நடைபெறுகிறது என்று முதல்வர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து, அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: ""உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு ஈழத்துச் சிவத்தம்பி போன்ற தமிழ்ப் பேரறிஞர்கள் வந்து விடாமல் தடுக்க, இங்குள்ள சிலர் பெருமுயற்சி மேற்கொண்டு, தடுப்பணைகளாகச் செயல்படத் துடிக்கின்றார்கள். அவையெல்லாம், மழை பொழியும் போது மழலையர் மணலைக் குவித்துக் கட்டும் அணைகளாகவே உடனடியாகக் கரைந்து விடுகிற காட்சியைக் காணமுடியும். "ஈழத்துத் தமிழறிஞர் சிவத்தம்பி, உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு வரப்போவதில்லை' என்பது போன்ற ஒரு சூசகச் செய்தியை வெளியிட்டுள்ளனர். ஆனால், மாநாட்டு ஆய்வரங்கப் பணிகளுக்காக முன்னதாகவே வருவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், அதில் ஐந்து பொருண்மைகள் விவாதிக்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் வழங்கியிருக்கிறார். "உலகத் தமிழ் மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம்' என அறிவித்த போது அவர் எழுதிய கடிதத்தில், "மாநாட்டுக்கு கால அவகாசம் குறைவாக இருப்பதாகவும், தமிழறிஞர்கள் பலரும் கலந்து கொள்வதற்கு வசதியாக இடைக்காலம் ஒரு ஆறு மாதமாவது அவசியம்' என்று எழுதி இருந்தார். அதை ஏற்றுக் கொண்டுதான், 2010-ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை என்று மாற்றி அமைத்து அறிவிக்கப்பட்டுள்ளது'' என்று முதல்வர் விளக்கமளித்துள்ளார்.
கருத்துக்கள்

மாண்புமிகு முத்தமிழறிஞ்ர் அவர்கள் ஏன்தான் இப்படி அறிக்கை விடுகின்றாரோ தெரியவில்லை. அப்படித்தான் தேர்தலின் பொழுது மகன் அழகிரியைக் கொலை செய்ய மார்க்சிய பொதுவுடைமையினர் திட்டமிட்டுள்ளனர் என் அறிக்கை விட்டார். அறிஞர் சிவத்தம்பி அவர்கள் தெளிவானவர்; திறனாய்வாளர். ஈழத் தமிழர்கள் உணர்விற்குத்தானும் உடன்பட்டவன்தான் என்றும் சில வினாக்களுக்கான விடை தெரிந்தால்தான் மாநாட்டிற்கு வர இயலும் என்று தெரிவித்துள்ளார். செம்மொழிக் கருத்தரங்கமாக இருந்திருப்பின் யாரும் வருவதற்குத் தயங்க மாட்டார்கள். மாநாடு என்ற பெயரில் ஆரவார நிகழ்வுகள் நடைபெறும் என்பதாலும் ஈழத் தமிழர்களின் துயரத்தில் பங்கு கொள்ளாமல் அவர்களை ஒழித்ததற்குக் காரமணானவர்களைப் பாராட்டும் வெற்றித் திருவிழாவாகக் காட்டப்படும் என்பதாலும் தமிழ்நாட்டில் மாநாடு என்றாலே ஆளும் கட்சியின் துதி பாடல் என்னும் தவறான ஒழுகலாறு(கலாச்சாரம்), நிலைத்து விட்டதாலும் மானமுள்ள தமிழனாகத் தம் இன மக்களின் துயரத்தில் பங்கேற்கும் இனமானப்பற்று உள்ளவராத் தெரிவிக்கும் கருத்தைச் சொந்தப் புத்தி இல்லாதவர்போல் கூறுவது தவறல்லவா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/27/2009 5:40:00 AM

Mr.Sivathamby should not attend to this Tamil conference.Mr.Sivathamby is a asset for all Tamils,because more than100000 Tamils were killed and 300000 inside the camps in Sri Lanka. THIS IS NOT A GOOD TIME TO ATTEND TAMIL CONFERENCE.

By cholan
10/27/2009 1:50:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக