என் வாழ்வின் இலட்சியம்!
கால் ஊனத்தால், கையால் வேகமாக தலைகீழாக நடந்து, கின்னஸ் சாதனை புரிந்த டமேரு: நான், உலகின் பின்தங்கிய நாடான,எத்தியோப்பியாவை சேர்ந்த, கால் ஊனமுற்ற மாற்றுத் திறனாளி. என் தாய், காட்டில் சென்று விறகு வெட்டி, விறகை முதுகில் சுமந்து, கீழே விழாமல் இருக்க, ஒரு கயிற்றால் வயிறோடு இறுக கட்டி, பல மைல் தூரம் சென்று, விறகு எடுத்து வரும் வேலை செய்தார். கர்ப்ப காலத்தில், இவ்வேலையை செய்ததால், பிறக்கும் போதே என் கால்கள், முட்டிக்குக் கீழ் எதிர்புறமாக, வளைந்தபடி இருந்தன. நான் ஊனமாகவும், தவறான வழியில் பிறந்ததாலும், உதவாக்கரை என எண்ணி, பெற்ற தாயே, சாணக் குவியலில் தூக்கி எறிந்தார். "பிறந்த யாருக்கும், இவ்வுலகில் வாழ அனுமதி யுண்டு. கடவுள் இவனையும் வாழ அனுமதித்து உள்ளார்' எனக் கூறி, என் தாத்தா தான், வளர்த்து வந்தார். மருத்துவர் ஒருவரின் உதவியால், இலவச சிகிச்சை பெற்று, வளைந்த கால்கள் ஓரளவு சரி செய்யப்பட்ட பின், பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார். ஏழு வயதாகும் குழந்தைகளோடு, ஒன்றாம் வகுப்பு படித்த போது, எனக்கு, 16 வயது. குழந்தை களிடம், தலைகீழாக நடந்து, உதவாக்கரை என, தாயே என்னை தூக்கி எறிந்ததால், ஊரில் உள்ள எவரும், என்னை மதிக்கவில்லை. இது எனக்கு வருத்தத்தை தந்தாலும், இனி என்னைப் போல் இருக்கும் யாரும், வருந்தக் கூடாது என, எண்ணி, அவர்களை கண்டறிந்து, உரிய வாய்ப்புகளை பெற்று தருவதையே, என் வாழ்வின் லட்சியமாக கருதினேன். குழந்தைகளை மகிழ்விக்கவும், "வாக்கிங் ஸ்டிக்' எனும், ஊன்று கோல் உதவியுடன், கையால் தலைகீழாக நடந்து காட்டிய வித்தையே, கின்னஸ் சாதனையாக மாறியது. ஒரு நிமிடத்தில், 76 மீட்டர் தூரத்தை, தலைகீழாக நடந்தும், உயர்ந்த மலைகளில் ஏறியும், சாதித்து காட்டி னேன். தற்போது, மாற்றுத் திறனாளிக் கான அமைப்பை ஆரம்பித்து, அவர்களுக்கு தேவையான உதவியை செய்து வருவதன் மூலம், என் வாழ்வின் லட்சியத்தை, நிறைவேற்றி
வருகிறேன்.

GREAT HUMAN...MOTHERS SHD BE CAREFUL WHEN THEY CARRY THEIR BABY TOO!
பதிலளிநீக்கு