தனித்தேர்வராக எழுதிய காரைக்கால் மாற்றுத்திறன் மாணவி + 2 தேர்வில் 1159 மதிப்பெண்
காரைக்கால் : காரைக்காலில், கண் பார்வைக் குறைபாடுள்ள மாணவி, பிளஸ் 2 பொதுத் தேர்வை,
தனித் தேர்வராக எழுதி, 1,159 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
காரைக்கால் பெசன்ட் நகரைச் சேர்ந்தவர் ஜோ பெரோரா. இன்ஸ்சூரன்ஸ் நிறுவன
ஊழியர். இவரது மகள் டெயன்னா பெரோரா, தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்
பிளஸ் 1 வணிகவியல், கணக்குப் பதிவியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ்
பாடப் பிரிவு படித்து வந்தார்.
பிறவியிலேயே கண் பார்வைக் குறைபாடு (மேக்குலர் டி ஜெனரேஷன்) உள்ள இவருக்கு,
பார்வைக் குறைபாடு மேலும் அதிகரித்ததால், பிளஸ் 2 வகுப்பைத் தொடர்வதில்
சிக்கல் ஏற்பட்டது. இதனால், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் செ#முறைத்
தேர்வுகள் செ#வதில் கடினமாக இருக்கும் என்பதால், வேறு பள்ளியில் சேர்ந்து
படிக்குமாறு பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியது.
மனம் தளராத மாணவி டெயன்னா பெரோரா, வீட்டிலிருந்தவாறே படிப்பைத்
தொடர்ந்தார். மாணவிக்கு, அதே பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் ஊக்கமும், முழு
ஒத்துழைப்பும் கொடுத்து, பாடங்களைக் கற்றுக் கொடுத்தனர். பள்ளி சார்பில்,
பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டதால், தனித் தேர்வராக எழுத
விண்ணப்பித்தார். கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திற்குப் பதிலாக, அரசியல்
அறிவியல் (பொலிட்டிக்கல் சயின்ஸ்) பாடத்தைத் தேர்வு செ#தார்.
ஆசிரியர் உதவியோடு, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவி டெயன்னா பெரோரா,
பிரெஞ்சு மொழிப் பாடத்தில், 194 மதிப்பெண்கள், ஆங்கிலம் -182, பொருளாதாரம்
-198, அரசியல் அறிவியல் -187, வணிகவியல் - 198, கணக்குப் பதிவியலில் - 200
என, மொத்தம், 1,159 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். மாணவி டெயன்னா
பெரோரா கூறியதாவது:
கண் பார்வை குறைவாக இருந்தாலும், கடின உழைப்பின் மூலமும், பெற்றோர்
ஆதரவோடும், லட்சியத்தோடும் படித்ததால், அதிக மதிப்பெண்கள் எடுக்க
முடிந்தது. ஆனால், இந்த மதிப்பெண்களுக்கு அரசு அங்கீகாரம் கிடைக்கவில்லை
என்ற வருத்தமுள்ளது.
பள்ளியிலிருந்து நானாக முன்வந்து வெளியேறவில்லை. எனது உடல் நிலையைக் கருதி,
தனித் தேர்வராக தேர்வு எழுதுமாறு பள்ளி நிர்வாகம் கேட்டுக் கொண்டது. எனவே,
எனக்கு உரிய அங்கீகாரத்தை அரசு வழங்க வேண்டும். பட்டப்படிப்பு முடித்து,
கல்லூரி விரிவுரையாளராகப் பணியாற்ற விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக