படப்பொறி மூலம் காணும் உலகமே தனி... - முகமது இரபி
முகமது இரபி.
வடலூரில் பிறந்து, நெய்வேலியில் படித்து
வளர்ந்தவர்.தற்போது புதுச்சேரியில் உள்ள "ஹாங்கர் 17 'என்ற நிறுவனத்தில்
கம்ப்யூட்டர் வரைகலை நிபுணராக உள்ளார்.
இவருக்கு சிறு வயது முதலே புகைப்படங்கள் மீது காதல் உண்டு.
நண்பர்கள் வைத்திருக்கும் கேமிராக்களைக் கொண்டு அவ்வப்போது படங்கள் எடுத்துவந்தார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்தான் சொந்தமாக "கேனன் கேமிரா செட்' வாங்கினார்.
அதன்பிறகு விடுமுறை விட்டால் போதும் கேமிராவை எடுத்துக்கொண்டு படம் எடுக்க கிளம்பிவிடுவார்.
புகைப்படம் எடுப்பது இவருக்கு பொழுதுபோக்கு மட்டுமே.
கொஞ்ச காலம் போட்டோ ஆல்பம் டிசைனராக பணிபுரிந்ததில், வித்தியாசமான
புகைப்படங்களைப் பற்றி தெரிந்து கொண்டார், மேலும் "கலர் கரெக்ஷன்' பற்றியும் புரிந்து கொண்டார்.
இதன்
காரணமாக இவர் எடுக்கும் படங்களில் தேவைக்கு ஏற்ப, இவர் செய்யும் சின்ன,
சின்ன கரெக்ஷன் காரணமாக படங்கள் தனித்துவம் பெற்று நிற்கின்றது.
"புதுச்சேரி போட்டோகிராபி கிளப் 'என்ற அமைப்பின் மூலம் குழுவாக சென்று படம் எடுப்பது, எடுத்த படங்களை பற்றி விவாதிப்பது, பின் அந்த படங்களை "முகநூலில்' பகிர்ந்து கொள்வது என்று எப்போதும் சுறு, சுறுப்பாக இயங்கிக் கொண்டு இருக்கிறார்.
நாம் கண்ணால் காணும் உலகம் வேறு, கேமிராவின் மூலம் காணும்
உலகம் வேறு என்பதை புரிந்து கொண்டபின், எனது புகைப்படங்களை எப்படி
வித்தியாசப்படுத்துவது என்பதில் தீவிரமாய் இருக்கிறேன்."புதுச்சேரி போட்டோகிராபி கிளப் 'என்ற அமைப்பின் மூலம் குழுவாக சென்று படம் எடுப்பது, எடுத்த படங்களை பற்றி விவாதிப்பது, பின் அந்த படங்களை "முகநூலில்' பகிர்ந்து கொள்வது என்று எப்போதும் சுறு, சுறுப்பாக இயங்கிக் கொண்டு இருக்கிறார்.
சர்வதேச அளவில் புகைப்படம் தொடர்பான சமூக வலைத்தளத்தில் இவரது படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இன்னமும் நிறைய படங்கள் எடுக்கவேண்டும், நிறைய சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளார், வாழ்த்துக்கள்.
முகமது ரபியுடன் தொடர்பு கொண்டு பேச: 9843576850.
- எல்.முருகராசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக