புதன், 15 மே, 2013

தில்லித் தமிழ்ச்சங்கத்திற்குத் தோரண வாயில் நிதியுதவி - தொல்காப்பிய ஆய்விருக்கை, கணிணித்தமிழ் விருது,

 பேரவையில் விதி 110-இன் கீழ் முதல்வர் செயலலிதா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

கம்ப்யூட்டர் வழியே தமிழ் மொழி பரவிட வகை செய்திட கம்ப்யூட்டர் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில், முதலமைச்சர் கணினித் தமிழ் விருது வழங்கப்படும். போப் விருது, உமறுப்புலவர் விருது, கணினித் தமிழ் விருது  ஆகிய மூன்று விருதுகளைப் பெறுபவருக்கு விருதுத் தொகையாக ரூ.1 இலட்சம், தங்கப் பதக்கம், தகுதியுரை, பொன்னாடை ஆகியன வழங்கப்படும். இந்த விருதுகள் சித்திரை திருநாள் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று வழங்கப்படும்.
ஆந்திர பல்கலைக்கழகம்: தமிழறிஞர் மு.வ.வின் வேண்டுகோளுக்கிணங்க, ஆந்திரத்தில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான திருப்பதி திருவேங்கடன் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்ட தமிழ்த் துறை இப்போது பொன்விழா கண்டுள்ளது. அங்குள்ள பேராசிரியர்கள் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், மூன்று உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்படும்.
தில்லி தமிழ்ச் சங்கம்: தில்லி தமிழ்ச் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று சங்கத்துக்கு தோரண வாயில் கட்டுவதற்கு நிதியுதவியாக ரூ.25 லட்சம் வழங்கப்படும். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தொல்காப்பியத்தின் பெயரால் ஆய்விருக்கை ஏற்படுத்தப்படும். இதற்காக ரூ.50 லட்சம் வைப்புத் தொகையாக வைக்கப்படும்.
அண்ணா நினைவிடத்தில் பூங்கா: சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் 3 ஏக்கர் பரப்பிலான காலியிடத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக