ஞாயிறு, 12 மே, 2013

பொதுநல மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது: வாசன்

இலங்கை :பொதுநல மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது: வாசன்

காமன்வெல்த் நாடுகளின் மாநாடு இலங்கையில் நடைபெற்றால் அதில் இந்தியா பங்கேற்கக் கூடாது என பிரதமரிடம் வலியுறுத்துவோம் என மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு சனிக்கிழமை வருகை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்தாமல் வேறுநாட்டில் நடத்த நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காங்கிரஸ் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். அதனையும் மீறி இலங்கையில் மாநாடு நடைபெற்றால் அதில் இந்தியா பங்கேற்கக் கூடாது என பிரதமரிடம் வலியுறுத்துவோம்.
எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அதனை நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே விசாரணைக்கும் தயாராக உள்ளது. ஆனால், இதையெல்லாம் ஏற்றுக் கொள்ளாமல் நாடாளுமன்றத்தை முடக்குவதிலேயே பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குறியாக உள்ளன. இதனை மக்கள் நன்கறிவார்கள்.
நிலையான, உறுதியான ஆட்சிக்காக கர்நாடக மக்கள் காங்கிரûஸ வெற்றி பெறச் செய்துள்ளனர். இந்த வெற்றி வரும் மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும்.
வறட்சி நிவாரணம்: தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய நிபுணர் குழு பார்வையிட்டுச் சென்றுள்ளது. தமிழக விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியைத் தொடங்க அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, அங்கு விரைவில் மின் உற்பத்தி தொடங்கும். அதன் மூலம் தமிழகத்தின் மின் தட்டுப்பாடு குறையும் என்றார் ஜி.கே.வாசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக