வியாழன், 16 மே, 2013

குடும்ப வறுமையால் படித்தேன்!

குடும்ப வறுமையால் படித்தேன்!


ஏழ்மையிலும்,  + 2 பொது த் தேர்வில், மாநில அளவில் முதலிடம் பெற்ற, மாணவன் செயசூர்யா: நான், திருச்செங்கோட்டில் உள்ள, பாவடியைச் சேர்ந்தவன். ஏழ்மையான குடும்ப சூழ் நிலையில், ஒரு ஓட்டு வீட்டில் வசிக்கிறோம். அப்பா, திருச்செங்கோட்டில், ஒரு காட்டன் மில்லில், "ஸ்டோர் கீப்பராக' பணியாற்றியதால், தினமும் மோட்டார் சைக்கிளில் சென்று வருவது வழக்கம். ஒரு முறை அப்படி வீடு திரும்பும் போது, எதிரே வந்த இன்னொரு மோட்டார் சைக்கிள் மோதி, விபத்து ஏற்பட்டது.அதில், என் அப்பாவுக்கு நெற்றி பொட்டில் அடிபட்டு, சுயநினைவை இழந்தார். அன்றிலிருந்து இதுவரை, படுத்த படுக்கையாகவே இருந்து வருகிறார். கை, கால்கள் செயல்படாத நிலையில், கொஞ்சம் கொஞ்சமாகவே பேச்சும் வந்தது. யாராவது சேரில் உட்கார வைத்தால் மட்டுமே, உட்கார முடியும். அப்பாவிற்கு தேவையான, "பிசியோதெரபி' போன்ற அத்தனை வேலைகளையும், அம்மா செய்வார். அம்மா, குடும்ப தேவைக்காக வேலைக்கும் சென்று, அப்பாவையும் கவனித்தார். ஏழ்மை நிலையால், திருச்செங்கோடு அரசு பள்ளியில் படித்த என்னை, உறவினர் ஒருவர், வித்யா விகாஸ் பள்ளியில் சேர்த்து, எட்டாம் வகுப்பிலிருந்து, பிளஸ் 2 வரை அவர் செலவிலேயே படிக்க வைத்தார். "ஆர்த்தோ' பிரிவு மருத்துவராகி, அப்பா உடல் நிலையை சரியாக்குவேன் என, அடிக்கடி அம்மாவிடம் சொல்வேன். கடந்த, 10 ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியே வர முடியாமல், அப்பா படும் துன்பமும், அதனால் மாத வருமானம் இன்றி, வறுமையால் வாடிய குடும்ப சூழ்நிலையை மட்டுமே நினைத்து படித்ததால் தான், 1,189 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் முதலிடம் பிடிக்க முடிந்தது. 10ம் வகுப்பிலும், 491 மதிப்பெண் பெற்றேன்.உதவி என, இதுவரை யாரிடமும் கேட்கவில்லை. ஆனால், நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தது. "நீங்கள் என்னவாக ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு கனவு காணுங்கள். நிச்சயம் அந்த இடத்தை அடைவீர்கள்' என, அப்துல் கலாம் சொன்னது போல், என் கனவும் தற்போது நிறைவடைந்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக