வெள்ளி, 17 மே, 2013

தமிழ்த் தாய்க்குச் சிலை:ஆங்கிலப் பாடமொழியா?: கருணாநிதி கேள்வி

தமிழ்த் தாய்க்கு ச் சிலை:ஆங்கில ப் பாடமொழியா?: கருணாநிதி கேள்வி


சென்னை: தமிழ்த் தாய்க்கு சிலை வைப்பதாகக் கூறிவிட்டு, ஆங்கிலத்தைப் பாட மொழியாக்க முயற்சிப்பது ஒன்றுக்கொன்று முரண்பாடாக உள்ளது,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது பேட்டி:தமிழ்த் தாய் சிலை அமைக்க, 100 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், தாய்மொழி எல்லா நாடுகளிலும் பயிற்று மொழியாக ஆக்கப்படும் காலக்கட்டத்தில், தமிழகத்தில் அரசின் சார்பில், ஆங்கிலக் கல்வியைப் புகுத்தப் போவதாக விளக்கம் அளித்துள்ளனர். தமிழ்த் தாய்க்கு சிலை வைப்பதும், ஆங்கிலத்தைப் பாட மொழியாக ஆக்க முயற்சிப்பதும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக உள்ளது.சட்டசபையில் பேச விரும்புவோருக்கு வேலை இல்லை. ஒவ்வொரு நாளும், 110வது விதியின் கீழ் அறிக்கையைப் படித்து விட்டுப் போய் விடுகின்றனர். இதிலே விஷயம் அறிந்த, அரசியல் தெரிந்த, எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் இருக்கின்றனர். அவர்கள் கூட இதுப்பற்றி வாய் திறக்கவில்லை என்பது தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக