திங்கள், 13 மே, 2013

சூரியத் திறனில் இயங்கும் மிதிவண்டி பொறி. கல்லூரி மாணவர் அருவினை


சூரியத் திறனில் இயங்கும் மிதிவண்டி பொறி. கல்லூரி மாணவர் அருவினை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணை இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள், சூரிய ஒளி சக்தியில் இயங்கும் சைக்கிளை உருவாக்கியுள்ளனர்.

இக்கல்லூரி மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவர்கள் பார்த்தசாரதி, பிரவீன்குமார், ஜீவரத்தினம், சேகர் ஆகியோர் ஒருங்கிணைந்து, திட்டக்குழு கணேஷ்குமாரன் வழிகாட்டுதலின்படி சூரிய சக்தியில் இயங்கும் சைக்கிள் வடிவமைத்துள்ளனர். சூரிய சக்தியில் இயங்கும் சைக்கிளை நேற்று கல்<லூரி வளாகத்தில் செயல் விளக்கம் செய்து காட்டினர்.

புதிய கண்டுபிடிப்பை உருவாக்கிய மாணவ குழுவினர் கூறியதாவது:புவி வெப்பமயமாக, பெரிதும் காரணம் பெட்ரோலிய எரிபொருள் மூலம் இயங்கும் வாகனங்கள் தான். அதற்கு மாற்றாக, சூரிய சக்தியில் இயங்கும் இரு சக்கர வாகனமான சைக்கிளை உருவாக்கியுள்ளோம்.புதிய கலப்பின முறையில் சூரிய ஒளி ஆற்றல், மின்னோட்டம் உண்டாக்கும் இயந்திரம் மற்றும் மரபுவழி மின்சாரம் ஆகியவை மூலம் பசுமை புரட்சிக்கு வித்திடும் வகையில், இரு சக்கர வாகனத்தை வடிவமைத்திருக்கிறோம்.

ஆரம்ப நிலையில் மட்டும் சிறிது மின்சாரம் மூலம் மின் கலத்தை மின்னூட்டம் செய்ய வேண்டும். பின், அனைத்து தேவைகளுக்கும் சூரிய ஒளி மின்னூட்டம் உண்டாக்கும், இயந்திர வழியாக ஆற்றல் பெறப்பட்டு இயக்கப்படும்.வாகனத்தில் பயன்படும் மோட்டார்கள் இதற்கு முன், மின்னூட்டம் அல்லது மின்னிறக்கம் ஏதாவது ஒரு செயலை மட்டுமே செயல்படுத்த முடிந்தது. இதற்கு மாறாக, புதிய முயற்சியின் மூலம், இரு செயல்களும் ஒரே நேரத்தில் செய்ய முடியும்.

இதன் மூலம், பயண தூரம் அதிகரிப்பதுடன், மொபைல்ஃபோன்களுக்கும் சார்ஜ் செய்து கொள்ளும் வசதி உள்ளது.இவ்வாறு கூறினர்.புதிய கண்டுபிடிப்பை உருவாக்கிய மாணவர்களை, கல்லூரி துணை தலைவர் குமரன், முதல்வர் ராமநாதன், இயக்குனர் ஆறுமுகம், பதிவாளர் சத்தியசீலன் உள்ளிட்ட பலர் பாராட்டினர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக