வெள்ளி, 2 நவம்பர், 2012

இலங்கை த் தமிழர் இனப்படுகொலை - ஐ.நா. அமைப்பில் கோ.க. மணி வாதம்

இலங்கை  த் தமிழர் விவகாரம்: ஐ.நா. அமைப்பில்  கோ.க. மணி வாதம்

First Published : 01 November 2012 05:55 PM IST
இலங்கையில் தமிழர்களின் நிலை குறித்து மதிப்பீட்டாய்வு ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பசுமைத்தாயகம் சார்பில் ஜி.கே. மணி, இர. அருள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இது குறித்து பாமக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 31ம் தேதியன்று ஜெனிவாவில் நடைபெற்ற முன்னோட்ட விசாரணையில் ஜி.கே. மணி உட்பட உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான மனித உரிமை அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஜி.கே. மணி முன் வைத்த வாதங்களில், இலங்கையில் நடப்பதை உள்நாட்டுப் பிரச்னையாக பார்க்காமல், இன அழிப்பாகத்தான் பார்க்க வேண்டும். இலங்கைப் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அனைவரையும் அவர்களின் சொந்த ஊர்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழீழம் குறித்து ஐ.நா. மூலம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கூறினார்.
தொடர்ந்து இன்று நடைபெற்ற காலமுறை மதிப்பீட்டாய்விலும், ஜி.கே. மணியும், அருளும் பங்கேற்று வாதங்களை முன்வைத்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக