சனி, 3 நவம்பர், 2012

இலங்கைச் சிக்கலுக்குப் பொது வாக்கெடுப்பே தீர்வு :கருணாநிதி

இலங்கை ப்  பிரச்னைக்கு ப் பொது வாக்கெடுப்பே தீர்வு :கருணாநிதி

First Published : 03 November 2012 03:15 PM IST
இலங்கை பிரச்னைக்கு பொது வாக்கெடுப்பே தீர்வாகும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியார்களை சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி, செய்தியர்ளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.அதன் விவரம் பின்வருமாறு : செய்தியாளர் :- ஐ.நா. சபையில் தளபதி ஸ்டாலின் தாக்கல் செய்த  மனு பற்றிய விவரங்களைத் தெரிவிக்க முடியுமா?
கருணாநிதி:-  ஐ.நா. மன்றத்தில் டெசோ சார்பிலும்,  தி.மு. கழகம் சார்பிலும்,   கழகத்தினுடைய  பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும்,  நாடாளுமன்ற கழகக் குழுவின் தலைவர் டி.ஆர். பாலு அவர்களும் நவம்பர் 1ஆம் தேதி ஈழத் தமிழர்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வகை செய்யும்  டெசோ மாநாட்டுத் தீர்மானங்களும்,  அதன் அடிப்படையில்  திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்துக்களும் அடங்கிய  விரிவான,  நீண்ட அறிக்கையை   வழங்கியிருக்கிறார்கள்.   அதன் தொடர்ச்சியாக  மனித உரிமை ஆணையத்திலும் இந்த மனுக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
ஐ.நா. மன்றத்தினுடைய  துணைப் பொதுச் செயலாளர் மனுக்களைப் பெற்றுக் கொண்டு,  இலங்கையில் நடைபெற்ற  - இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலவரங்களைப் பற்றிய விவரங்களை யெல்லாம் மு.க. ஸ்டாலின் மற்றும் பாலுவிடம் நேரடியாகத் தெரிந்துகொண்டு  உரிய நடவடிக்கைகளை  எடுப்பதற்கு  உறுதி அளித்திருக்கிறார்.
டெசோ மாநாட்டின் விளைவாக  விளைந்துள்ள   இந்த முன்னேற்றம் ஈழத் தமிழர்களுடைய  வாழ்வாதாரத்தையும்   அவர்களுடைய அரசியல் எதிர் காலத்தையும்  ஒளிமயமாக  ஆக்குவதற்கு  பயன்படும் என்ற நம்பிக்கையை இந்த நிகழ்வுகள்  மூலம் நாங்கள் பெற்றிருக்கிறோம்.
ஏற்கனவே  ஈழத்தில் நடைபெற்ற குரூரமான காட்சிகள்  சி.டி. யாகத் தயாரிக்கப்பட்டு  அவற்றையும்  எங்களுடைய வேண்டுகோள் மனுவோடு  இணைத்து தந்திருக்கிறோம்.
இப்போது ஈழத்தில் பல்வேறு  விரும்பத்தகாத  நிகழ்ச்சிகள்  தமிழர்கள்  கண்ணீரும் செந்நீரும் வடிக்கின்ற   அளவுக்கு  நடைபெற்றுள்ள  சூழ்நிலையில் இனி மேலாவது  ஈழத் தமிழர்களுக்கு  விடிவு காலம் ஏற்பட வேண்டும்;   அதற்கு  அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு தர வேண்டும்;  அதற்கான முயற்சிகளை ஐ.நா. மன்றம் எடுத்திட வேண்டும்;  அதற்குத் தேவையான ஒத்துழைப்பை  இந்திய அரசும் வழங்கிட வேண்டும் ஆகிய  இத்தனை கருத்துக்களும் வேண்டுகோள்களும் அடங்கிய ஆவணம் தான் இப்போது ஸ்டாலின், பாலு மூலமாக வழங்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் :-  உங்கள் கோரிக்கையில் பொது வாக்கெடுப்பைத் தான் முக்கியமாக வலியுறுத்தியிருக்கிறீர்கள்.   அதற்காக நீங்கள் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்வீர்களா?
கருணாநிதி :- வலியுறுத்தியிருக்கிறோம்.   டெசோ மாநாட்டில் தீர்மான மாகவே நிறைவேற்றியிருக்கிறோம்.   அந்தத் தீர்மானங்களைச் செயல்படுத்துவதற்கு  இலங்கை அரசை துhண்டி அதற்கான அழுத்தத்தை இந்திய பேரரசும் தந்தாக வேண்டும் என்பது எங்களுடைய கருத்தாகும். மத்திய அரசுக்கு டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்பட்டு, தொடர்புடைய அமைச்சரிடத்தில் அந்தத் தீர்மானங்கள் விளக்கிக் கூறப்பட்டிருக்கிறது.    இந்தியாவிற்குள் தான் நமது தமிழ்நாடு இருக்கின்ற காரணத்தால்,  தமிழ்நாட்டில் நடைபெற்ற டெசோ மாநாட்டுத் தீர்மானங்களை அதன் முக்கியத்துவத்தை  இந்தியா உணராமல் இருக்க முடியாது என்று கருணாநிதி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக