சர்வதேச விண்வெளி கூடத்துக்கு ச் சென்ற தனியார் விண்கலம் தரை இறங்கியது
New York
செவ்வாய்க்கிழமை,
அக்டோபர் 30,
12:44 PM IST
மாலை மலர்
நியூயார்க், அக். 30-
அமெரிக்கா,
ஜப்பான், ரஷியா உள்ளிட்ட 15 நாடுகள் இணைந்து விண்வெளியில் ஆய்வு கூடம்
அமைத்து வருகின்றன. அதற்கான கட்டுமான பொருள் மற்றும் அங்கு தங்கியிருக்கும்
விண்வெளி விஞ்ஞானிகளுக்கு தேவையான பொருட்களை அமெரிக்காவின் என்டீவர்
விண்கலம் மூலம் அனுப்பி வந்தனர். ஆனால் அந்த விண்கலம் சமீபத்தில் பணி ஓய்வு
பெற்றது.
எனவே, தனியார் நிறுவனத்தின் விண்கலம்
மூலம் அவற்றை சமீபத்தில் அனுப்பி வைத்தனர். ஆளில்லாமல் இயங்கும் அந்த
விண்கலம் பொருட்களை ஏற்றிக்கொண்டு சர்வதேச விண்வெளிக்கு சென்றது. பின்னர்
அங்கு பொருட்களை இறக்கிவிட்டு திட்டமிட்டபடி 18 நாட்கள் கழித்து நேற்று
அமெரிக்காவின் பசிபிக் கடலில் வெற்றிகரமாக தரை இறங்கியது. அதை நீர்மூழ்கி
வீரர்கள் குழு பத்திரமாக மீட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக