சொல்கிறார்கள்
காலத்திற்கு ஏற்பமாறுங்க!'
பாவை யர் மெய்ப்பை(குர்த்தி) தயாரிப்பில் ஈடுபட்டுள்ள லட்சுமி விட்டல்: நான், எம்.காம்., முடித்து விட்டு, ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். திருமணத்திற்குப் பின், குடும்ப பொறுப்புகள் காரணமாக, வேலை யை தொடர முடியாமல் போய் விட்டது. ஆனால், நான் பள்ளி, கல்லூரி படிக்கும் போதே, தையல் கற்று வைத்திருந்ததால், 10 ஆயிரம் ரூபாய் முதலீட்டில், ஒரு தையல் மிஷின் வாங்கி, வடபழனியில் சிறிய, "டெய்லரிங்' கடை துவக்கினேன். ஆரம்பத்தில், சிறிய அளவில், "ஆர்டர்கள்' எடுத்து, செய்து கொண்டிருந்தேன்.
இரண்டு ஆண்டுகள் கழித்து, இன்னும் இரண்டு மிஷின்கள் வாங்கி, சில பெண்களை வேலைக்கு எடுத்தேன். இன்று, கல்லூரி பெண்கள் நிறைய பேர், ஜீன்ஸ் தான் விரும்பி அணிகின்றனர். அதற்கு ஏற்றது, குர்த்தி தான். எனவே, குர்த்தி தயாரிப்பில் ஆர்வம் காட்டத் துவங்கினேன். "டீன் ஏஜ்' பெண்கள் தான், எங்கள் இலக்கு. அவர்கள் விருப்பத்தைப் புரிந்து, நானே, விதவிதமான குர்த்திகளை வடிவமைத்தேன்.
சரியான அளவு, குறிப்பிட்ட நேரத்தில் டெலிவரி செய்வது போன்றவற்றால், நிறைய வாடிக்கையாளர்கள் சேர்ந்தனர். விலை என்று பார்த்தால், எங்களின் தயாரிப்பு, 50லிருந்து, 2,500 ரூபாய் வரைக் கும் உள்ளது.ஆரம்பத்தில் தொழிலாளர் பிரச்னை தான் அதிகமாக இருந்தது. நான்கைந்து பேர் வேலைக்கு உள்ளனரே என, நம்பி ஆர்டர் எடுத்தால், திடீரென இரண்டு பேர் வரமாட்டார்கள். இப்படி நிறைய பிரச்னை இருந்தது.எப்போதும், வேலைக்கு வரும் ஆட்களை மட்டுமே நம்பி இருக்கக் கூடாது.
வெளியேயும் சில நபர்களை தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம் என்பதை உணர்ந்தேன். அதன் பின், வெளியேயும் சில பெண்களை பிடித்து, அவர்களிடம் ஆர்டர் கொடுத்தேன்.இந்த தொழிலுக்கு, என் கணவர் எப்போதும் ஆதரவாக இருக்கிறார். என் தொழிலை விரிவுபடுத்தி, இதன் மூலம், நிறைய பெண்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பதே என் லட்சியம்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக