ஞாயிறு, 28 அக்டோபர், 2012

அணுஉலை எதிர்ப்பாளர்கள் முற்றுகை ப் போராட்டம்: தலைமை ச் செயலகத்தில் 3 அடுக்கு ப் பாதுகாப்பு

சென்னையில், நாளை அணுஉலை எதிர்ப்பாளர்கள் முற்றுகை ப் போராட்டம்: தலைமை ச் செயலகத்தில் 3 அடுக்கு ப் பாதுகாப்பு
சென்னையில், நாளை அணுஉலை எதிர்ப்பாளர்கள் முற்றுகை போராட்டம்: தலைமை செயலகத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு
சென்னை, அக்.28-

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் நாளை சென்னை கோட்டையின் முன் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளனர். இந்த போராட்டத்திற்கு ம.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

நாளைய போராட்டத்தில் இந்த கட்சிகளை சேர்ந்த தொண்டர்களும் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டசபை கூட்டமும் நாளை தொடங்குகிறது.

இதையடுத்து கோட்டையை சுற்றியுள்ள சாலைகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளார். காமராஜர் சாலை, ரிசர்வ் வங்கி, தீவுத்திடல் உள்ளிட்ட கோட்டையை சுற்றியுள்ள அனைத்து சாலைகளிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வெளி மாவட்டங்களில் இருந்து பஸ் மற்றும் வேன்களில் சென்னைக்குள் நுழையும் போராட்டக்காரர்களை அந்தந்த மாவட்ட எல்லையிலேயே தடுத்து நிறுத்தி, கைது செய்யவும் மாவட்ட சூப்பிரண்டுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் ஜார்ஜ் போலீஸ் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். நேற்றிரவு சென்னையில் நடைபெற்ற அதிரடி சோதனையில் 589 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக