வெள்ளி, 2 நவம்பர், 2012

இலங்கையில் தமிழர் வாழ்வுரிமைக்கு முயற்சி எடுப்போம்: மு.க. தாலினிடம் ஐ.நா. அதிகாரி உறுதி

இலங்கையில் தமிழர் வாழ்வுரிமைக்கு முயற்சி எடுப்போம்: மு.க. தாலினிடம் ஐ.நா. அதிகாரி உறுதி
இலங்கையில் தமிழர் வாழ்வுரிமைக்கு முயற்சி எடுப்போம்: மு.க.ஸ்டாலினிடம் ஐ.நா. அதிகாரி உறுதி
சென்னை, நவ. 2-
 
தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
 
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. மன்றத்தில் ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து கருணாநிதியின் மனுவினையும், சென்னையில் நடைபெற்ற டெசோ மாநாட்டுத் தீர்மானங்களையும், ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கவுன்சிலில் வழங்கப்பட உள்ள மனுவினையும் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு ஆகியோர் நேற்று அமெரிக்க நேரப்படி பகல் 11.15 மணி அளவில் ஐ.நா. மன்றத்தின் துணை பொதுச் செயலாளர் யான் லியாசனிடம் வழங்கினர்
 
அப்போது மு.க.ஸ்டாலின் இலங்கையில் நடைபெற்ற போரினால் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்க வேண்டும், நிம்மதியான வாழ்க்கை அமைய மீண்டும் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும், கவுரவமான வாழ்க்கை அமைய வேண்டுமென்ற டெசோ மாநாட்டின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
 
போரினால் 90 ஆயிரம் பெண்கள் விதவைகளாக ஆக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் மேலும் துன்பத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களை இலங்கை ராணுவம் தவறான முறையில் நடத்துகின்றனர். இதற்கு தீர்வு காண வேண்டும்.
 
இலங்கை போரினால் 1 லட்சத்து 25 ஆயிரம் தமிழர்கள் பல்வேறு நாடுகளில் புலம் பெயர்ந்து நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்ந்து கொண் டிருக்கின்றனர். அவர்கள் விரும்பியபடி இலங்கையில் குடியுரிமை பெற்றுத்தர வேண்டும்.
அனாதைகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.
 
தமிழர் பகுதிகளில் உள்ள இலங்கை ராணுவத்தை திருப்பப் பெற வேண்டும். தமிழர்கள் அவர்கள் விரும்பிய அரசியல் தீர்வு ஏற்பட அவர்கள் விருப்பப்படி பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றார்.
 
அதற்கு ஐ.நா. மன்ற துணைப் பொதுச் செயலாளர் யான் லியாசன், இந்த பிரச்சினை இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு மட்டும் அல்ல, உலகெங்கும் உள்ள அனைவருக்கும் மனித உரிமை காக்கப்பட வேண்டும் என்பது குறித்ததாகும். இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வை ஐ.நா. மன்றம் ஏற்படுத்தும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக