சனி, 3 நவம்பர், 2012

புரளியால் திசை மாறிய வாழ்க்கை!'

"வதந்தியால் திசை மாறிய வாழ்க்கை!'
கிராமியப் பாடல்கள் மூலம், திரையுலகில் புகழ்பெற்ற கொல்லங்குடி கருப்பாயி: அந்தக் காலத்தில், வயக்காட்டில் வேலை பார்க்கும் போது, களைப்புத் தெரியா மல் இருக்க, பாட்டுப் பாடுவோம்.அப்படித்தான், கதிர் அறுப்புக் காலத்தில் பாடிக் கொண்டிருந்தோம். அந்தப் பக்கமாக வந்த, திருச்சி வானொலியில் வேலை பார்க்கும், துயிலி சுப்ரமணி என்பவர், அங்குள்ளவர்களை பாடச் சொன்னார். எல்லாப் பெண்களும் பாடினோம். பதிவு செய்து கொண்டு சென்றவர், என்னை மட்டும், திருச்சி வானொலியில் பாட அழைத்தார்.அங்கு பாடி முடித்ததும், நான் தமிழகம் முழுவதும் பிரபலமானேன். அந்த நேரத்தில் தான், நடிகர் பாண்டியராஜன் என்னை, "ஆண்பாவம்' படத்தில் நடிக்க அழைத்தார்.
ஆரம்பத்தில் முடியாது என, மறுத்தாலும், பிடிவாதமாக என்னை நடிக்க வைத்தார். பேருக்கும், புகழுக்கும் பஞ்சமில்லை. நன்றாகச் சென்று கொண்டிருந்த வாழ்க்கையில், ஒரு விபத்து அப்படியே புரட்டிப் போட்டு விட்டது.நானும், என் கணவரும் மதுரைக்குப் பாடப் போகும் போது, நடந்த விபத்தில், அவர் இறந்து விட்டார். அந்த விபத்தில், நானும் இறந்து விட்டதாக, செய்தி பரவி விட்டது.
வதந்தியால் வாழ்க் கையே முடிந்து போனது. கையில் உள்ள பணத்தைப் போட்டு, என் பேத்திக்குத் திருமணம் செய்து வைத்தேன். என் பேத்தியை அண்டிப் பிழைக்கிறேன். என்னைப் பார்க்கும் பலர், "நீ உயிரோடு தான் இருக்கிறாயா?' என, கேட்கும் போது, என் மனம் படும் பாடு, எனக்குத் தான் தெரியும். என் பேத்தி மட்டும் இல்லையென்றால், நான் எப்போ தோ பட்டினியால் இறந்திருப்பேன்.இன்று வரை நான் பாதுகாக்கும் சொத்து, கருணாநிதி, ஜெயலலிதா இருவரிடமும் வாங்கிய விருதுகள் தான். என் ஒரே கோரிக்கை, தங்க வீடும், மூன்று வேளை சாப்பாட்டிற்கும் வழி கிடைக்க வேண்டும் என்பது தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக