புதன், 18 ஏப்ரல், 2012

யெனீவாவில் ஒரு மாதத்துக்கும் மேலாகத் தங்கியிருந்து சிறிலங்காவுக்கு எதிராக பரப்புரை செய்த புலம்பெயர் கனடியத் தமி்ழ்ப் பெண்


Video
யெனீவாவில் ஒரு மாதத்துக்கும் மேலாகத் தங்கியிருந்து சிறிலங்காவுக்கு எதிராக பரப்புரை செய்த புலம்பெயர் கனடியத் தமி்ழ்ப் பெண்
[ செவ்வாய்க்கிழமை, 17 ஏப்ரல் 2012, 05:45.46 PM GMT ]
 
பல தடைகளுக்கும் இடையூறுகளுக்குமிடையில் ஐ.நா. மனித உரிமைகள் அவையில் சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதன் முறையாக சிறிலங்காவுக்கு எதிராகப் பல நாடுகள் வாக்களித்தமைக்குப் பின்னணியில் உலகின் பல பாகங்களிலும் இருந்து வந்திருந்த செயற்பாட்டாளர்கள் பெரும் பங்கு வகித்துள்ளனர்.
கனடியத் தமிழர் பேரவையின் சார்பில் கரி ஆனந்தசங்கரி அவர்களும் செல்வி வாணி செல்வராசா அவர்களும் சட்டவல்லுனர் உரிமை பேணும் கனடா அமைப்பினூடாகக் கலந்து கொண்டு சிறிலங்காவுக்கு எதிரான கருத்துருவாக்கல் மற்றும் பரப்புரைச் செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.
திரு. சாருயன் கணபதிப்பிள்ளையுடனான தனிப்பட்ட நேர்காணலில் தனது ஐ.நா. செயற்பாட்டு அனுபவங்கள் மற்றும் சிறி லங்காவின் தற்போதய அரசியல், ஆட்சிக்கு ஏற்பட்டிருக்கும் அழுத்தங்கள் பற்றி விளக்குகிறார் செல்வி வாணி செல்வராசா.
தற்போது ஓர் சட்டப் பயிற்சி மாணவரான வாணி எதிர்வரும் யூன் 2012இல் ஒன்ராறியோ பார் கூட்டமைப்பில் இணைந்து கொள்வார். கனடியத் தமிழர் பேரவையின் இயக்குனர் சபையிலும் அங்கம் வகிக்கிறார். அண்மையில் 'சிறி லங்கா கண்காணிக்கப்படுகிறது; இங்கிருந்து நாம் பயணிப்பது எங்கே' என்ற தலைப்பில் இவர் எழுதிய கருத்துக் கட்டுரை ரொறன்ரோ இசுரார் பத்திரிகையில் வெளியானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக