செவ்வாய், 17 ஏப்ரல், 2012

visiting card for snake catching

 சொல்கிறார்கள்

பாம்பு பிடிக்கவிசிட்டிங்கார்டு!பாம்பு பிடிப்பதில் வல்லவரான முத்துஷா: திண்டிவனம் மாமா மக்பூலிடம் தான் வளர்ந்தேன். அவர் பாம்புகளை வளர்ப்பதில், ஆர்வம் உள்ளவர். கண்ணாடிக் கூண்டை வைத்து, அதில் பாம்புகளை வளர்த்து வந்தார். சாரை, கட்டுவிரியன், நாகப்பாம்பு என்று, கிட்டத்தட்ட எல்லா வகை பாம்புகளும் அங்கு இருக்கும். ஆரம்பத்தில், அந்தப் பக்கம் போகவே பயப்படுவேன். ஆனால், மாமாவுடன் பழகிப் பழகி, பாம்புகளும் பழக்கமாகிவிட்டது.
கண்ணாடிக் கூண்டை சுத்தம் செய்வது, பாம்புகளை இடமாற்றம் செய்வது என, பாம்புகளுடனே வாழ ஆரம்பித்தேன். அப்போது, எனக்குத் தொழுநோய் அறிகுறி இருந்ததால், செங்கல் பட்டு அருகில் உள்ள, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தேன். சிகிச்சை முழுதாக முடிந்த பிறகும் அந்த ஊரைவிட்டுப் போக மனம் இல்லை. பிழைப்பிற்காக, சைக்கிள் கடை வைத்தேன். அதன் பின் கார்ப்பென்ட்டர்; இப்போது, பாம்பு பிடிக்கும் தொழில் செய்கிறேன்.

இது காடு, மலை சூழ்ந்த பகுதி என்பதால், இங்கு பாம்பு நடமாட்டம் அதிகம். வீடுகளில், புகுந்த பாம்பை நான் ஆர்வமாக பிடிப்பதைப் பார்த்து, இந்தப் பகுதியில் எங்கு பாம்பு புகுந்தாலும் என்னை அழைப்பர். பிடித்த பாம்புகளை நான் காடுகளில் விட்டுவிடுவேன். பயம் இல்லாமல் பிடித்தாலும், என்னை நாகப்பாம்பு நான்கு முறையும், கட்டுவிரியன் இரண்டு முறையும் கடித்துள்ளன. இந்த இரண்டு வகை பாம்புமே அதிக விஷமுள் ளவை. உடனே சிகிச்சை எடுத்துடுவேன்.

"பாம்புகள் பிடித்து தரப்படும்' என்று விசிட்டிங் கார்டு போட்டு, தெரிந்தவர்கள் அனைவருக்கும் கொடுத்திருக்கிறேன். இந்தத் தொழிலுக்கு வந்து, 25 ஆண்டுகளாகிறது. இதுவரை, ஒரே நாளில், 11 பாம்புகளைப் பிடித்ததுதான் அதிகபட்சம்.
என் குடும்பத்தில், யாரும் பாம்புக்குப் பயப்பட மாட்டார்கள். பாம்பு கடித்தால் பயப்படக் கூடாது; முதலுதவி எடுத்துக் கொண்டு உடனே மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு செல்ல வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக