சனி, 21 ஏப்ரல், 2012

மண்டியிடச் சென்ற சுசுமா

எல்லாரும் எங்கள் பக்கம்தான் என இறுமாப்பைக்காட்ட அழைத்திருப்பான் கொலை வெறியன் பக்சே.நாங்களும் உங்கள் கூட்டாளியாகத்தான் இருப்போம் என உறுதியளிக்க மண்டியிடச் சென்றுள்ளார் சுசுமா சுவராசு. பிற உறுப்பினர்களுக்குத் தன்மானம் இருப்பின் இனி அவர் தலைமையில் குழுவில் இருக்கமாட்டோம் எனக் கூற வேண்டும். ஆனால், பரிசு மயக்கத்தில இருப்பவர்களுக்கு உணர்வு எங்கே இருக்கும்? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

ராஜபக்சேவை தனியாகச் சந்தித்த சுஷ்மா சுவராஜ்

First Published : 21 Apr 2012 11:11:42 AM IST

கொழும்பு, ஏப். 21 : வெள்ளிக்கிழமை மாலை இந்திய நாடாளுமன்றக் குழுவினர் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு முன்கூட்டியே நேற்று காலை சுஷ்மா சுவராஜ் ராஜபக்சேவை தனிமையில் சந்தித்துப் பேசியுள்ளார்.நாடாளுமன்றக் குழுவினருக்கு ராஜபக்சேவுடன் சனிக்கிழமை விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்த நிலையில் அதனை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரத்து செய்யுமாறு கூறியிருந்தனர்.இந்த நிலையில்தான், சுஷ்மா சுவராஜ் நேற்று காலை ராஜபக்சேவை தனிமையில் சந்தித்து அவர் அளித்த காலை விருந்தில் கலந்து கொண்டுள்ளார். சக இந்தியக் குழுவினரை தவிர்த்து விட்டு சுஷ்மா சுவராஜ் மட்டும் போய் ராஜபக்சேவைச் சந்தித்திருப்பது மத்திய அரசின் ஆலோசனையின் பேரில் நடந்திருக்குமா என்ற சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுஷ்மா சுவராஜுக்கு ராஜபக்சே விருந்து:தனியாக சந்தித்ததால் சர்ச்சை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக