வெள்ளி, 20 ஏப்ரல், 2012

father's dream


அப்பாவின் கனவு

என் அப்பாவின் கனவுபெற்றோரை இழந்து, போராட்டகரமான வாழ்க்கையிலும், ஆசிரியர் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் உள்ள புனிதா: என் அப்பா நல்லசாமி, விவசாயம் செய்து கொண்டிருந்தார். சொந்தத்தில் சடையம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண் டார். அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருந்தனர். இருவரும், வாலிப வயதில் தற்கொலை செய்து கொண்டனர்.தன் மகன்கள் இறந்துவிட்டனரே என கவலைப்பட்ட அப்பா, என் அம்மா வன்னியம்மாளை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்டார். எங்கள் பெரியம்மா தனியாகவும், அம்மா, அப்பா தனியாகவும் இருந்தனர்.

பின், நானும், என் தங்கையும் பிறந்தோம்.என் அம்மா தறி வேலைக்குச் சென்று கொண்டிருந்தார். ஒரு நாள், தறிக்குள் கையை விட்டு, மூன்று விரல் துண்டாகி விட்டன. இதனால், வேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்தபோது, அம்மாவிற்கும், அப்பாவிற்கும் இடையே அடிக்கடி சண்டை வரும். இதில், என் அம்மா தற்கொலை செய்து கொண்டார்.
அப்போது நான், எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.

என்னையும், மனநலம் சரியில்லாத தங்கையையும், முதல் மனைவி வீட்டிற்கு அழைத்து வந்தார் அப்பா.நாங்களும் பெரியம்மாவிடம் பாசமாக இருந்தோம். நன்றாகப் படித்து, கல்லூரியில், பி.எஸ்சி., சேர்ந்தேன். 10 மாதத்திற்கு முன், திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, பெரியம்மா இறந்துவிட்டார்.அடுத்த நான்காவது மாதத்திலேயே அப்பாவும் இறந்துவிடவே, என்ன செய்வதென்று தெரியாமல் துடித்துவிட்டேன். கல்லூரிக்குச் செல்வதை நிறுத்திவிடலாம் என முடிவு செய்தேன்.

என் தங்கைக்கு சிகிச்சை அளித்து, என்னையும் டீச்சராக்க வேண்டும் என்பது, என் அப்பாவின் கனவு. அதற்காகத்தான், மீண்டும் கல்லூரிக்குச் செல்கிறேன். பால் கறந்து வீடுகளுக்கு ஊற்றிவிட்டு, சாப்பாடு சமைத்து தங்கைக்குக் கொடுத்து விட்டு, கல்லூரிக்குச் சென்று வந்து கொண்டிருக்கிறேன்.தற்போது, மாட்டுப் பால் வருமானத்திலேயே சமாளித்து வருகிறேன். அடுத்து, பி.எட்., படிக்க வேண்டும். மாட்டை விற்றாவது நான் பி.எட்., படித்து, என் தங்கையைக் குணமாக்குவேன். உதவி செய்ய : 8675234919

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக