புதன், 18 ஏப்ரல், 2012

Journey towards success!


வெற்றியைநோக்கிய பயணம்!


ராணுவ பயிற்சி மையங்களுக்கு தேவையான, எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை உருவாக்கி கொடுக்கும் விஜயஸ்ரீ: என் சொந்த ஊர் ஆந்திரா. ஐதராபாத்தில், பி.டெக்., முடித்தேன். விசாகப்பட்டினத்தில் உள்ள இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் டிசைன் இன்ஜினியராக தேர்வு செய்யப்பட்டேன். அன்றைய காலகட்டத்தில், பொதுத் துறை நிறுவனங்களில், வேலைக்குச் சேர்ந்தால், நம் வளர்ச்சி மெதுவாக இருக்கும் என்று பரவலாக ஒரு கருத்து இருந்தது. அதை மனதில் வைத்தே, நான் அந்த வேலையை ஏற்கவில்லை. என் திருமணம் முடிந்து, கணவர் உதயசங்கருடன் சென்னையில், குடியேறினேன்.

திருமணத்திற்குப் பின், வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்காமல், ஏதாவது செய்ய வேண்டும் என்ற நினைப்பு இருந்து கொண்டேயிருந்தது. அப்போது தான், நானும் என் கணவரும் சேர்ந்து வங்கியில் சிறுதொழில் பிரிவு மூலம், ஒரு லட்ச ரூபாய் கடன் பெற்று, "லேப் எலக்ட்ரானிக்ஸ்' நிறுவனத்தை ஆரம்பித்தோம். நன்றாக திட்டமிட்டு செய்ததால், துவக்கமே வெற்றியை நோக்கிப் பயணித்தது.முதலில், பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக்கிற்கு தேவையான பயிற்சி சாதனங்களை நேரடியாக விற்பனை செய்தோம். எங்களின் சிறப்பான பணியால், நிறைய ஆர்டர்கள் கிடைத்தது. ஆனாலும், சிறு சிறு பிரச்னைகள் காரணமாக இடையே திடீரென்று ஒரு தேக்கம் ஏற்பட்டது.

அப்போது தான், ராணுவத்திற்குத் தேவையான, பொருட்களை டெண்டர் எடுத்து செய்தோம். நாங்கள் கொடுத்த, தரமான பொருட்களால், கடந்த ஐந்து ஆண்டுகளாக, ராணுவ பயிற்சி மையத்திற்கு, தொடர்ந்து உபகரணங்கள் வழங்குகிறோம். எலக்ட்ரானிக்ஸ் துறையைப் பொறுத்தவரை, நிறைய மாற்றங்கள் நடந்துகொண்டேயிருக்கும். புதுபுது டெக்னிக் வந்து கொண்டேயிருக்கும். அதற்கு நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் இந்த தொழிலில் நிலைத்திருக்க முடியும்.எங்களை நம்பி, 50 குடும்பங்கள் இருப்பதும், நம் நாட்டிற்கான ஒரு சேவையில் நாங்க சிறியதொரு பங்களிப்பாக இருப்பதும், எங்களை மிகவும் சந்தோஷப்படுத்தும் விஷயங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக