முல்லைப்பெரியாற்றில் எனக் குறிப்பிட வேண்டிய தினமணி தவறாகக் குறிக்கலாமா? மேலும் பல ஒற்றுப்பிழைகளும் உள்ளன. இதைத் தெரிவித்தால் பெயருடன் இனத்தைக் காப்போம் என வருவதால் வெளியிடுவதில்லை. அச் செய்தி எல்லா இனத்திற்கும் பொருத்தமானதுதான். அவரவர் எழுத்தையும் மொழியையும் இனத்தையும் அவரவர் காக்க வேண்டியது கடமைதானே.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
First Published : 20 Apr 2012 08:36:14 PM IST
புது
தில்லி,ஏப்.20: முல்லை பெரியாரில் புதிய அணை கட்டுவது தொடர்பான திட்ட
அறிக்கையை கேரளா முதல்வர் உம்மன் சாண்டி, மத்திய நீர்வளத்துறை அமைச்சர்
பவன்குமார் பன்சாலை நேரில் சந்தித்து வழங்கியுள்ளார். இன்று கேரள முதல்வர்
உம்மன் சாண்டி, அமைச்சர் ஜோசப்புடன் சென்று புது தில்லியில் மத்திய
நீர்வளத்துதறை அமைச்சர் பவன்குமார் பன்சாலை சந்தித்தார். இந்த சந்திப்பின்
போது முல்லை பெரியாரில் புதிய அணை கட்டுவது தொடர்பான ரூ.663 கோடி
மதிப்பிலான திட்ட அறிக்கையை உம்மன்சாண்டி, மத்திய அமைச்சரிடம்
வழங்கியுள்ளார். திட்ட அறிக்கையை பெற்றுக்கொண்ட பவன்குமார் பரிசீலிப்பதாக
கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக