திங்கள், 16 ஏப்ரல், 2012

சுற்றுலாவா செல்கின்றனர்?




சுற்றுலாவா செல்கின்றனர்?

வி.சாரதி, மதுரையிலிருந்து எழுதுகிறார்:
 


 இலங்கையில், போருக்குப் பிறகு நிலவும் சூழ்நிலைகள் குறித்து அறிந்து வருவதற்காக, மத்திய அரசு அனுப்பவுள்ள அனைத்துக் கட்சிக் குழு கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.இலங்கை அரசு செய்யவுள்ள காரியத்தை, இந்திய அரசே செய்ய முன் வந்திருப்பது தான் ஆச்சர்யம்; அதிசயம்!போரினால் பாதிக்கப்பட்டவர்களின் மீள் குடியேற்றத்திற்காக, இந்தியா அளித்த, 500 கோடி ரூபாய் என்ன கதி ஆனது என்பது குறித்து ஆராய்வதே, அனைத்துக் கட்சிக் குழுவின் பிரதான நோக்கம்.ஆனால், குழுவினர் முள்வேலி முகாம்களில் உள்ள தமிழர்களை சந்திக்கக் கூடாது; சிங்களர்கள் தமிழ்ப் பகுதிகளில் குடியேறியுள்ளது குறித்து ஆராயக்கூடாது; தமிழர்கள் பகுதியில் நடக்கும் திடீர் தாக்குதல்கள் குறித்து விசாரிக்கக் கூடாது; அங்குள்ள அரசியல்கட்சிகள் எதையும் குழுவினர் சந்திக்கக் கூடாது என்று ஏகப்பட்ட "கூடாது'களை குழுவினரிடம் கூறி அனுப்பினால், அக்குழுவினர் இலங்கை சென்று எங்கு, யாரைச் சந்திப்பர்?ராஜபக்ஷேவையும், அவரின் சகோதர் களையும், அவரது குடும்பத்தினரையுமா?இதற்கு, 15 பேர் கொண்ட பார்லிமென்ட் உறுப்பினர்கள் குழு, இலங்கைக்குச் செல்ல வேண்டிய அவசியமே இல்லையே!மரியாதைக்குரிய பொருளாதார மேதை எம்.எம்.சிங்., ராஜபக்ஷேவிடம் தொலைபேசியில் பேசினால் போதுமே!இந்திய உதவியான, 500 கோடி ரூபாயில் கட்டப்பட்ட குடியிருப்புகள் குறித்தும், தமிழர்கள் அங்கு சந்தோஷச் சூறாவளியில் சிக்கி, ஆனந்த வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருப்பது போன்றும், அற்புதமான காட்சிகளை, "சிடி'யாக தயாரித்து அனுப்பி வைப்பாரே! நம் எம்.பி.,க்கள் அதை பார்லிமென்ட் நடுஹாலிலேயே கண்டு ரசிக்கலாமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக