புதிய முறை அறிமுகப்படுத்தப்படும் பொழுது எல்லா வகுப்புகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து எடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக எல்லா வகுப்புகளிலும் தமிழ்வாழ்த்து சேர்க்கப்பட வேண்டும். மொழிப்பாடங்கள் முதுநிலைக்கல்வி வரை இருக்க வேண்டிய ஒன்று. எனவே, தொடர வேண்டும். தமிழ்மொழிப்பாடங்களில் ஒரு பகுதி அறிவியல் துறை சார்ந்து இருக்க வேண்டும். பிற மொழிப்பாடங்களில் தமிழ் இலக்கியம், கலை, நாகரிகம்,பண்பாடு,இலக்கியம் முதலானவற்றின் சிறப்பும் வரலாறும் பாடநூல்களில் இடம் பெற வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
12-ம் வகுப்பு வரை பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய வல்லுநர் குழு: அமைச்சர் தகவல்
தினமணி First Published : 18 Apr 2012 04:16:42 PM IST
சென்னை, ஏப்.18: கல்வியின் தரத்தை உயர்த்த 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்வது குறித்து ஆய்வுசெய்ய வல்லுநர் குழு அமைக்க அரசு ஆணையிட்டுள்ளதாக அமைச்சர் சிவபதி தெரிவித்தார்.சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான கொள்கை விளக்கக் குறிப்புகளை அவர் இன்று தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:மாணவர்களின் கல்வி தரத்தை உலகளாவிய அளவில் உயர்த்த கல்வி அமைச்சர் தலைமையில் 10 பேர் கொண்ட வல்லுனர் குழுவை அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது. இவர்கள் கீழ்க்கண்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை வழங்குவார்கள். கல்வி தரத்தை உயர்த்த 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் மாற்றங்களை பரிந்துரை செய்தல், தற்போதுள்ள பாட நூல்களின் குறைகளை கண்டறிந்து தேவையான மாற்றங்களை கொண்டு வருதல், தரமான கல்வி வழங்க கட்டிட வசதி, இருக்கை வசதி, உபகரணங்கள் ஆகிய வசதிகளை பரிந்துரைத்தல், தேவைப்படும் முக்கியமான கல்விகள் ஆலோசனைகளை வழங்குதல், மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த அரசு கீழ்க்காணும் பணியிடங்களை நிரப்ப அனுமதி அளித்துள்ளது. முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்-4,207, பட்டதாரி ஆசிரியர்கள்-17,380, சிறப்பு ஆசிரியர்கள்-865, வேளாண் ஆசிரியர்கள்-25.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
4/18/2012 6:08:00 PM