First Published : 10 Aug 2011 11:06:26 AM IST
Last Updated : 10 Aug 2011 11:09:16 AM IST
லண்டன், ஆக.10: லண்டனில் ஏற்பட்ட வன்முறை இப்போது 4-வது நாளாக புதிய நகரங்களுக்கும் பரவியுள்ளது. வன்முறைச் சம்பவங்களையடுத்து லண்டனில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.பிரிட்டனின் 3-வது பெரிய நகரமான மான்செஸ்டரில் கடைகளின் மீது இளைஞர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். சில கடைகளில் கொள்ளையடிக்கப்பட்டது. அதை புகைப்படம் எடு்த்தவர்களை அவர்கள் விரட்டியடித்தனர். 30 ஆண்டுகளில் மிகவும் மோசமான வன்முறைச் சம்பவம் இது என போலீசார் தெரிவிக்கின்றனர்.மத்திய இங்கிலாந்தில் மேற்கு பிரோம்விச் மற்றும் உல்வெர்ஹாம்டன் நகர்களில் உள்ள கட்டடங்களுக்கு வன்முறையாளர்கள் தீவைத்தனர். நாட்டிங்காமில் உள்ள போலீஸ் நிலையம் ஒன்றின்மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தினர். எனினும் இதில் யாருக்கும் காயமேற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனிடையே வன்முறையைக் கட்டுப்படுத்தி அமைதியைக் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக