செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

Suit against national anthem : தேசியகீதத்தில் 'சிந்த்' என்ற சொல்லைப் பயன்படுத்துவதை எதிர்த்து மனு

அடிமை ஆட்சியின் பொழுது இங்கிலாந்து அரசரை வரவேற்றுப் பாடிய பாடலை நாட்டு வாழ்த்தாக வைத்திருப்பது நாட்டிற்கு இழுக்கு. எனவே,இப்பாடலையே  எடுத்து விட்டு  அனைத்துத் தேசிய  இனங்களையும் எதிரொலிக்கும் வகையில் வேறு பாடலை நாட்டுப்பாடலாக அறிவிக்க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

தேசியகீதத்தில் 'சிந்த்' என்ற வார்த்தையை பயன்படுத்துவதை 
எதிர்த்து மனு

First Published : 09 Aug 2011 12:12:46 PM IST


மும்பை, ஆக.9: தேசியகீதத்தில் சிந்த் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற பேராசிரியர் ஸ்ரீகாந்த் மாலுஷ்ட் என்பவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.சிந்த் என்ற வார்த்தை 1950-ம் ஆண்டில் சிந்து என அரசால் மாற்றப்பட்டதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.சிந்து என மாற்றப்பட்டாலும், தேசிய கீதத்தில் சிந்த் என்றுதான் தொடர்ந்து தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.சிந்த் பாகிஸ்தானின் ஒரு பகுதியாகவும், சிந்து நதி இந்தியாவிலும் உள்ளது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக