வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

mercy petitions rejected: இராசீவ் கொலைக்குற்றவாளிகளின் கருணை மனுக்கள் மறுப்பு

மரணத் தண்டனைகளை  ஒழிப்பது தொடர்பாக இந்திய அரசு முடிவெடுக்கும் வரை யாருக்கும்  தூக்குத்தண்டனை வழங்கக்கூடாது.  உண்மையான பயங்கரமான குற்றவாளிகள் இருக்கும் பொழுது் அப்பாவிகள் உயிரைப் பறிப்பது அறமாகாது. விரைவில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் விடுதலை செய்யப் பெற வேண்டும். மரணத்தண்டனைக்கு எதிரான இயக்கத்தினரும் மனித நேய இயக்கத்தினரும் விரைந்து செயலாற்ற வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

ராஜிவ் கொலைக்குற்றவாளிகளின் கருணை மனுக்கள் நிராகரிப்பு
First Published : 11 Aug 2011 03:09:41 PM IST


புதுதில்லி, ஆக.11: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொல்லப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் நிராகரித்துவிட்டார்.முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் மனிதவெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த படுகொலை வழக்கில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் நளினி ஆகியோருக்கு 1999-ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது.இந்த மரண தண்டனையை உச்சநீதிமன்றமும் 2000-ம் ஆண்டில் உறுதிசெய்தது. எனினும் நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.உச்சநீதிமன்றம் மரணதண்டனையை உறுதிசெய்ததைத் தொடர்ந்து 3 பேரும் குடியரசுத் தலைவரிடம் கருணை மனுக்கள் தாக்கல் செய்தனர்.3 பேரும் தாக்கல் செய்த கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கடந்த வாரம் நிராகரித்துவிட்டதாக குடியரசுத் தலைவர் மாளிகை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
கருத்துகள்

இவர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே பொய்யானது ..... 21 ஆண்டு தனிமை சிறை மற்றும் காவல் துறை கொடுமைகளுக்கு பின்னும் இவர்களை தூக்கில் ஏற்ற ஏன் துடிக்கிறார்கள்?
By Gautam
8/11/2011 5:12:00 PM
எதற்கென்றே தெரியாமல் சிவராசனுக்கு பாட்டரி வாங்கிக்கொடுத்த சிறு குற்றத்திற்காக பேரறிவாளன் எனும் சிறு தமிழ் இளைஞனுக்கு தூக்கு தண்டனை என்றால் , ராடார், குண்டு, துப்பாக்கி ஆயுதங்களைக் கொடுத்து ஈழத் தமிழர்களை வேட்டையாட உதவிய சோனியா & கோ வுக்கு என்ன தண்டனை? இந்தியாவின் தமிழினத்துக்கு என்றாவது நீதி கிடைக்குமா?
By மணி
8/11/2011 4:54:00 PM
CAPTIAL PUNISHEMENT SHOULD BE ABOLISHED. 96 COUNTRIES HAVE ALREADY ABOLISHED DEATH PENALITY. HANGING CAN BE REPLACED BY LIFE IMPRISONMENT. WE ARE LIVING IN THE 21th CENTUARY AND KILLING AN OFFERDER FOR KILLING ANOTHER IS ITSELF A CRIME. LET US ALL BEHAVE AS HUMAN BEEINGS.
By Paris EJILAN
8/11/2011 4:28:00 PM
ஈழ தமிழனே இறந்தாலும் வீர மரணம் . நான் உங்களுக்கு தலை வணங்குகிறேன்
By மண்
8/11/2011 3:54:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

1 கருத்து:

  1. மரணத் தண்டனை குறித்த பொதுவான கருத்தை வெளியிடத் தினமணிக்கு மனம் வரவில்லை. அதன் உள்மனம் வேறு சொல்கிறதோ?

    பதிலளிநீக்கு