வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கை திரும்ப உரிய சூழல்: அமெரிக்கா வலியுறுத்தல்

இதற்கான ஒரே வழி தமிழ் ஈழத்திற்கு உலக நாடுகள் ஏற்பிசைவு வழங்குவதுதான்.
  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கை திரும்ப உரிய சூழல்: அமெரிக்கா வலியுறுத்தல்

First Published : 12 Aug 2011 01:23:27 AM IST


வாஷிங்டன், ஆக.11: இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் மீண்டும் தாயகம் திரும்புவதற்கு உரிய சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.  இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தாயகம் திரும்பும் தமிழர்கள் மரியாதையுடன் அவர்கள் வாழ்ந்த இடத்துக்கு திரும்புவதற்கு உரிய வழிகள் செய்யப்பட வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை வலியுறுத்தியுள்ளது.  விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது பல தமிழர்கள் தங்களது வசிப்பிடங்களை விட்டு வேறிடங்களுக்குக் குடிபெயர்ந்தனர். சிலர் வெளிநாடுகளில் குடியேறினர்.  இவ்விதம் புலம்பெயர்ந்த தமிழர்கள் பத்திரமாக தங்களது இருப்பிடத்துக்குத் திரும்ப வேண்டும். அதற்குரிய வழிவகைகள் காணப்பட வேண்டும் என்று வெளியுறவு அமைச்சக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  கடந்த மாதம் இந்தியா வந்திருந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்தியபோது, தமிழீழ மக்கள் விவகாரம் மிக முக்கியமாக விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்குப் பிறகு அங்கு மனிதாபிமான உதவிகள் மேற்கொள்வதற்காக அமெரிக்கா கடந்த ஆண்டு 2 கோடி டாலர் நிதியுதவி அளித்தது.  நடப்பு நிதி ஆண்டில் 49 லட்சம் டாலர் நிதியுதவியை அமெரிக்க மனித உரிமைகள் ஆணையம் அளித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக