ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

தமிழ் ஈழம்தான் நிரந்தரத் தீர்வு : இராமதாசு, திருமாவளவன் பேச்சு

கடைசித் தமிழன் உள்ளவரை தமிழ் ஈழம் பற்றிப் பேசிக் கொண்டு இருப்பான் எனத் திரைப்படம்போல் பேசுவதன் பொருள் என்ன? எஞ்சிய தமிழர்களையும்அழிக்குமாறு சிங்களத்திற்குத் தெரிவிக்கிறார்களா?  எஞ்சிய தமிழர்கள் உலகத்தமிழர்களுடன் சேர்ந்து தமிழ் ஈழத்தை அமைப்பார்கள். இனப்படுகொலையாளிகள் அனைவருக்கும் கொடூரமான மரணத்தண்டனை  வழங்குவார்கள் என்று பேசினால் பொருள் உண்டு. பதவிகளுக்காகக்  கொலையாளிகளுடன் கூட்டணிவைத்ததால் தடுமாறுகிறார்கள். இனியாவது விழித்தெழுந்து பகைவர்களுடன் சேர வேண்டா.  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!    மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
தமிழ் ஈழம்தான் நிரந்தர தீர்வு : ராமதாஸ், திருமாவளவன் பேச்சு

First Published : 07 Aug 2011 04:48:25 PM IST


சென்னை, ஆக.7: தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தமிழ் ஈழமே தீர்வு என்ற தலைப்பில் சென்னையில் இன்று கருத்தரங்கம் நடந்தது.   கருத்தரங்கில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் உரையாற்றினர். திருமாவளவன் பேசியதாவது: தமிழ் ஈழ விடுதலை போராட்டம் நசுக்கப்பட்டு விட்டது. இனி யாரும் பேச மாட்டார்கள் என்ற மமதையில் சிங்கள ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் கடைசி தமிழன் உள்ளவரை தமிழ் ஈழத்தை பற்றி பேசிக் கொண்டுதான் இருப்பான்.   தமிழ்நாட்டில் சாதி மதத்தால் மக்களிடையே பிளவு, இன்னொரு புறத்தில் சினிமாவாலும், போதை பழக்கத்தாலும் இளைய சமுதாயம் சீரழிந்து வருகிறது. அவர்களுக்கு தமிழர்களை பற்றியோ, தமிழர்களின் வரலாற்றை பற்றியோ புரிந்து கொள்ள இயலவில்லை. முதல்வர் ஜெயலலிதா இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என சட்ட சபையில் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். தமிழ் ஈழமே தீர்வு என தீர்மானம் கொண்டு வர தயாரா? தி.மு.க.வும், தமிழ் ஈழம் என்று பலமேடையில் தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால், அப்போது தி.மு.க. சூழ்நிலை கைதியாக இருந்தது. தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தமிழ் ஈழம்தான் தீர்வு என பேசுவது இல்லை. இலங்கை தமிழர் பிரச்னை தீர, தமிழர்களுக்கு தனி தமிழ் ஈழம் மலர வேண்டும்.பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசும் போது, இலங்கை இன பிரச்சினைக்கு ஒரே தீர்வு தமிழ் ஈழம்தான். தமிழ் ஈழம் மலரும் வரை குரல் கொடுப்போம் என்றார்.

1 கருத்து: