பிற சமயத்தினரைக் கிறித்துவ சமயத்திற்கு மாற்றுவதற்கும் தமிழ்நாட்டில் இந்துக்கள் என்று சொல்லப்படுபவர்களை எல்லாம் அச்சமயத்திற்கு மாற்றி வருவதற்கும் தண்டனை எதுவும் சொல்லவில்லையா? விளம்பரத்திற்காக அறிக்கை கொடுப்பதை எல்லாம் வெளியிட்டுப் பக்கத்தை வீணாக்காதீர்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
கட்டாயப்படுத்தி நயன்தாராவை மதம் மாற்றியது குற்றம்: பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம்
Chennai செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 09, 4:25 PM IST
நயன்தாரா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் டயானா மரியம். தந்தை குரியன். தாய் பெயர் ஓமணா. கேரளாவைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள். சினிமாவுக்காக நயன்தாரா என தனது பெயரை மாற்றிக் கொண்டு நடித்து வந்தார்.
இந்துவான பிரபுதேவாவுடன் நயன்தாராவுக்கு திடீர் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இதற்காக முதல் மனைவி ரம்லத்தை பிரபுதேவா விவகாரத்து செய்துள்ளார்.
பிரபுதேவாவை மணப்பதற்காக நயன்தாரா இந்து மதத்துக்கு மாறியுள்ளார். சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஆரியசமாஜ் கோவிலுக்கு சென்று புரோகிதர்கள் முன்னிலையில் ஹோமம் வளர்த்து வேதமந்திரங்கள் சொல்லி இந்துவாக மாறினார். அவருக்கு இந்துவாக மாறியதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
நயன்தாரா மதம் மாறிய தகவல் சொந்த ஊர் கிறிஸ்தவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. உள்ளூர் கிறிஸ்தவ கோவிலில் விமர்சனங்கள் கிளம்பின. இதனால் நயன்தாரா பெற்றோரை முற்றுகையிட்டு கண்டனம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நயன்தாராவை கட்டாயப்படுத்தி மதம் மாற்றி இருப்பதாக கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த மக்கள் ஐக்கிய முன்னணி ஒருங்கிணைப்பாளரும், ஆராதனை கிறிஸ்தவ பொறுப்பாளருமான இனியன்ஜான் கண்டித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பிரபுதேவாவை திருமணம் செய்வதற்காக நயன்தாரா கிறிஸ்தவ மார்க்கத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார் என்ற செய்தியை கேட்டபோது வருத்தமாகவும் வேதனையாகவும் இருந்தது. ஒரு உண்மையான கிறிஸ்தவர் அடுத்தவரின் எந்த பொருளுக்கும் ஆசைப்படக்கூடாது என்பது வேதாமகத்தின் ஆழ்ந்த கருத்து. அப்படி அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுவதும் அவற்றை அபகரிக்க நினைப்பதும் சாபத்தை விளைவிக்கக் கூடியது என்று பைபிள் தெளிவாக கூறுகிறது.
ஏற்கனவே ரம்லத் என்கிற இஸ்லாமிய சகோதரி பிரபுதேவாவை நம்பி மதம் மாறி திருமணம் செய்து கொண்டு தற்போது அவர் படுகிற வேதனைகளை நாட்டு மக்கள் நன்கறிவர்.
உபாகமம் 28-ம் அதிகாரம் 15 முதல் 68 வசனங்கள் வரை மொத்தம் 43 வசனங்களில் ஒருவன் கிறிஸ்தவத்தை விட்டு பின் மாற்றம் அடைந்தால் ஏற்படக்கூடிய சாபங்கள் குறித்து பைபிள் எச்சரிக்கை செய்கிறது.
பைபிளின் சாபம், ரம்லத்தின் வேதனை, ஒட்டு மொத்த நற்பெண்களின் கோபத்தை ஒருங்கே பெற்றிருக்கிறார் நயன்தாரா. அவரை பிரபுதேவா கட்டாயப்படுத்தி மதம் மாற்றி இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இது ஒரு குற்றச்செயல் ஆகும்.
இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.
கருத்துகள்
பிற சமயத்தினரைக் கிறித்துவ சமயத்திற்கு மாற்றுவதற்கும் தமிழ்நாட்டில் இந்துக்கள் என்று சொல்லப்படுபவர்களை எல்லாம் அச்சமயத்திற்கு மாற்றி வருவதற்கும் தண்டனை எதுவும் சொல்லவில்லையா? விளம்பரத்திற்காக அறிக்கை கொடுப்பதை எல்லாம் வெளியிட்டுப் பக்கத்தை வீணாக்காதீர்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! | ||
நாலு பேருக்கு நல்லது செய்யனும்னா ,எதுவுமே தப்பில்ல. வேலு நாயக்கர் சொன்னது மறந்து போச்சா?ஒருத்தி அழுதால்தான், ஒருத்தி சிரிக்க முடியும், நயன் சிரிச்சா தீபாவளி,இனி நாளும் ஏகாதசி.என்ன சரிதானே ..ஒரு பெண்ணை காதலித்தால் அவள் மட்டும்தான் கண்ணுக்கு தெரியனும்.அவ அப்பன் ,அம்மா,அண்ணன் ,பழைய காதலன் ,புருஷன் ,மதம் ,கலர் எதுவுமே கண்ணுக்கு தெரிய கூடாது,கல்யாணத்திற்கு பிறகு என்றால் ,அவள் தங்கை இருந்தால் உதவிக்கு அழைத்து கொள்ளலாம்.இதுதான் நடைமுறை.................. | ||
இந்துகளை கிறிஸ்தவர்களாக மாற்றுவது பாவம் இல்லையா?? | ||
இந்த பொம்பளை இங்க இருந்து நம்ம மானத்தை வாங்குறத விட , வெளிய போனது எவ்வளவோ சிறப்பு ,இதை போய் பெரிசா பீல் பண்ணுறீங்க ,அவன் (பிரபு தேவா) கட்டினவளை மறந்தான் ,இவள் கடவுளை மறந்தால் ,இம்சை போன வரைக்கும் சந்தோசமே , | ||
மதம் மாத்துறதுக்கு,ஏழையா இருந்த நீ காசு கொடுக்குற ..... நோயாளிகளின் நோயை குணபடுத்தி தருவோம்னு பொய் சொல்லி மதம் மத்துற... இந்த பொழப்புக்கு ....உன்ன சொல்லி தப்பு இல்ல.... . பாரின் பண்டு தன் உன்ன பேச வைக்குது
|
பிரபுதேவாவுக்கு கிறிஸ்துவ அமைப்பு கண்டனம்
First Published : 10 Aug 2011 11:53:18 AM IST
Last Updated : 10 Aug 2011 12:06:23 PM IST
நடிகை நயன்தாராவை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்துள்ளதாக கிறிஸ்துவ அமைப்பு ஒன்று கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த மக்கள் ஐக்கிய முன்னணி ஒருங்கிணைப்பாளரும், ஆராதனை கிறிஸ்தவ பொறுப்பாளருமான இனியன்ஜான் வெளியிட்ட அறிக்கை: பிரபுதேவாவை திருமணம் செய்வதற்காக நயன்தாரா கிறிஸ்தவ மார்க்கத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார் என்ற செய்தியை கேட்டபோது வருத்தமாகவும் வேதனையாகவும் இருந்தது. ஒரு உண்மையான கிறிஸ்தவர் அடுத்தவரின் எந்த பொருளுக்கும் ஆசைப்படக்கூடாது என்பது வேதாகமத்தின் ஆழ்ந்த கருத்து. அப்படி அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுவதும் அவற்றை அபகரிக்க நினைப்பதும் சாபத்தை விளைவிக்கக் கூடியது என்று பைபிள் தெளிவாக கூறுகிறது. ஏற்கனவே ரம்லத் என்கிற இஸ்லாமிய சகோதரி பிரபுதேவாவை நம்பி மதம் மாறி திருமணம் செய்து கொண்டு தற்போது அவர் படுகிற வேதனைகளை நாட்டு மக்கள் நன்கறிவர். உபாகமம் 28 ம் அதிகாரம் 15 முதல் 68 வசனங்கள் வரை மொத்தம் 43 வசனங்களில் ஒருவன் கிறிஸ்தவத்தை விட்டு பின் மாற்றம் அடைந்தால் ஏற்படக்கூடிய சாபங்கள் குறித்து பைபிள் எச்சரிக்கை செய்கிறது. பைபிளின் சாபம், ரம்லத்தின் வேதனை, ஒட்டு மொத்த நற்பெண்களின் கோபத்தை ஒருங்கே பெற்றிருக்கிறார் நயன்தாரா. அவரை பிரபுதேவா கட்டாயப்படுத்தி மதம் மாற்றி இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இது ஒரு குற்றச்செயல் ஆகும் என்று இனியன்ஜான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக