ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

மலேசிய அரசுக்கும் சிறீலங்கா அரசுக்கும் மறைமுகத் தொடர்பு

மலேசிய அரசுக்கும் சிறீலங்கா அரசுக்கும் மறைமுக தொடர்பு

சர்வதேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களை நாட்டுக்கு திருப்பி அனுப்புவதில் மலேஷிய உள்துறை அமைச்சர் ஹிஷாம்டீன் ஹூசைனுக்கு மறைமுகமான தொடர்பு இருப்பதாக பீனாங் முதலமைச்சர் பி.ராமசாமி குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், 2009ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றாக தோற்கடிக்கப்பட்ட நிலையில், ஏன் மலேசியா முன்னாள் போராளிகளை கைது செய்து தடுத்து வைத்து நாட்டுக்கு திருப்பி அனுப்புகிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில், மலேஷியா அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் மறைமுகமான தொடர்பு இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எப்படியிருப்பினும் அவ்வாறான தொடர்புகள் தெளிவுபடுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்
அத்ததோடு யுத்தத்தில் இருந்து தப்பி மலேஷியா மீண்டும் அந்நாட்டுக்கு அனுப்புவது என்பது கவலைக்குரிய விடயமாகும். ஏனெனில் தமிழர்கள் அனைவருமே தமழீழ விடுதலைப் புலிகளின் ஆதவாளர் எனும் கண்கொண்டுதான் இலங்கை அரசு பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இவ்வாறு திருப்பி அனுப்பப்படுபவர்கள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைப்படுத்தப்பட்டு கொலை செய்யப்படக் கூடுய வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக