புதன், 10 ஆகஸ்ட், 2011

சிறிலங்காவின் போர்க்குற்றங்கள்: அனைத்துலக விசாரணைப் பொறிமுறையே அனைவரதும் எதிர்பார்ப்பு – அமெரிக்கா

சிறிலங்காவின் போர்க்குற்றங்கள்: அனைத்துலக விசாரணைப் பொறிமுறையே அனைவரதும் எதிர்பார்ப்பு – அமெரிக்கா

சிறிலங்காவில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்று அவசியம் என்பதே ஒவ்வாருவரினதும் விருப்பம் என்று நம்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பிரதிப் பேச்சாளர் மார்க் ரோனர் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் விவகாரத்தில் ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை சிறிலங்கா சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சிறிலங்காவை வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட அமெரிக்கா தொடர்ந்தும் அழைப்பு விடுப்பதாகவும் மார்க் ரோனர் கூறியுள்ளார்.
போர்க்குற்றச்சாட்டுகளை விசாரிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா, அமெரிக்கா, மற்றும் அனைத்துலக சமூகம் போன்றன விடுத்து வரும் அழைப்பை சிறிலங்காவின் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச நிராகரித்துள்ளது குறித்து, கருத்து வெளியிட்டுள்ள மார்க் ரோனர்,
-போரின் போது இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்து சிறிலங்காவும் கூட விசாரணை நடத்துகிறது என்பதை அவர் அறிவார் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனாலும் அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்று அவசியம என்பதே ஒவ்வொருவரினதும் எதிர்பார்ப்பு என்று நம்புவதாகவும் மார்க் ரோனர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக