திங்கள், 15 பிப்ரவரி, 2010

உறுதிமொழியை ராஜபட்ச காப்பாற்ற வேண்டும்: எஸ்.எம்.கிருஷ்ணா



சென்னை, ​​ பிப்.​ 14:​ "இலங்கை அதிபர் ராஜபட்ச இலங்கைத் தமிழர் விவகாரத்தில் ஏற்கெனவே அளித்த உறுதிமொழியைக் காப்பாற்ற வேண்டும்' என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வலியுறுத்தி பேசினார்.அதற்கு இந்தியாவின் சார்பில் எந்த வகையான உதவி தேவையோ அந்த உதவியை இந்தியா அளிக்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.ராஜாஜி ஃபவுண்டேஷன் சார்பில் மூதறிஞர் ராஜாஜியின் 131}வது பிறந்தநாள் விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.​ ​ இதில் பங்கேற்ற எஸ்.எம்.​ கிருஷ்ணா,​​ 10}ம் வகுப்புத் தேர்வில் எஸ்.சி.,​​ எஸ்.டி.​ பிரிவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகள்,​​ ரேவதி ​(திருநெல்வேலி),​​ தாரணி ​(திருச்சி)​ ஆகிய இருவருக்கும் மேல்படிப்புக்கான உதவித் தொகைகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் அவர் பேசியது:இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியவர் ராஜாஜி.​ இவர் அரசியல்,​​ பொருளாதாரம்,​​ சமூகம்,​​ கலை என பல தளங்களிலும் பரிணமித்தவர்.​ அரசியல்வாதி என்பவர் அடுத்த தேர்தலை மட்டும் மனதில் வைத்து வேலை செய்பவர்.​ ஆனால் ராஜாஜி,​​ அரசியல்வாதி என்ற நிலையைத் தாண்டி அடுத்த தலைமுறைகளை மனதில் வைத்து செயல்பட்டவர்.சுதந்திரம் கிடைத்தவுடன் தேர்தலும் அவற்றின் ஊழல்களும்,​​ அநீதியும்,​​ அதிகாரம் மற்றும் பண பலமும்,​​ நிர்வாகத் திறமை போன்றவையும் மக்களின் வாழ்வை நரகமாக்கிவிடும் என்று ராஜாஜி அப்போதே கூறினார்.​ அதை மக்கள் இன்று கண்டு வருகிறார்கள்."இனி நான் தேர்தல்களில் போட்டியிடப்போவதில்லை என்பதால் வெளிப்படையாக பேசலாம்.​ தேர்தல்களில் பணபலம்,​​ ஆள்பலம்,​​ அரசு அதிகார பலம் ஆகியவை இணைந்து செயலாற்றுகின்றன.​ விடுதலையை அடைவதற்கும்,​​ தீண்டாமையை ஒழிப்பதற்கும் நவீன கல்வியே முக்கியம்' என்று அவர் வாதிட்டார்.பெண் கல்வி,​​ பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் போன்றவற்றிலும் சிறப்பாகச் செயல்பட்டவர் ராஜாஜி.அவரது திருக்குறள்,​​ ராமாயணம்,​​ மகாபாரதம் ஆகியவற்றின் மொழிப் பெயர்ப்பு மூலம் அவரது ஆன்மிக ரீதியிலான கல்விச் சிந்தனையை அறியலாம்' என்றார் எஸ்.எம்.கிருஷ்ணா.திரிபுரா மாநில முன்னாள் தலைமைச் செயலர் ராகவன் பேசியது:​​ அரசியலில் தூய்மை ஏற்படவும்,​​ நல்ல நிர்வாகம் அமையவும்,​​ மக்கள் சேவையில் பொதுமக்களே அதிக அளவில் ஈடுபடவும் இளைஞர்கள் முன்வந்து செயலாற்ற வேண்டும்.​ இதுவே ராஜாஜியை நினைவுகூறும் இந்நாளில் நாம் ஏற்க வேண்டிய உறுதிமொழி' என்றார்.விழாவில்,​​ மியூசிக் அகாதெமி தலைவர் முரளி,​​ ராஜாஜி ஃபவுண்டேஷன் நிர்வாகி கேசவன் ஆகியோர் பங்கேற்றனர்.
கருத்துக்கள்

என்ன உறுதி மொழி என்பதை காங்.அரசு உலகறிய முதலில் தெரிவிக்க வேண்டும். அப்பொழுதுதான் தமிழர்களைக்கொல்ல இந்திய அரசு என்னென்ன உதவிகைளச் செய்தது என்பதை மறைவாக, கமுக்கமாக (இரகசியமாக) வைத்திருக்க வேண்டும் என்ற உறுதி மொழியைச் சிங்கள அரசு காப்பாற்றும். எத்தனை காலம்தான் ஏமாற்றுவர் இந்த நாட்டிலே! கொலைகார ஆட்சி முடிவிற்கு வரும் நாள் எந்நாளோ?

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/15/2010 3:06:00 AM

இலங்கையில் 27 இந்து கோவில்களும், தமிழர் பண்பாட்டு சின்னங்களும் இடிப்பு விரிவாக்கப் பணிகள் என்ற போர்வையில் யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதி விரிவாக்கத் திட்டத்திற்காக 27 இந்து கோயில்களையும், பழமையான தமிழர் பண்பாட்டுச் சின்னங்களையும் இடித்துத் தகர்ப்பதென இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. இதனால் யாழ்பாணம் குடாநாட்டில் வாழும் இந்துக்களும், தமிழர் கலாச்சார அமைப்புகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர். யாழ்ப்பாணக் குடா நாட்டில் உள்ள நான்கு பிரதான வீதிகளை அகலப்படுத்திச் சீரமைக்கும் பணியை இலங்கை அரசு சீன நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைத்துள்ளது. உள்நாட்டு ஒப்பந்தக்காரர்களை ஓரந்தள்ளிவிட்டு ஒரு சீன நிறுவனத்திடம் இந்த பணிகளை இலங்கை அரசு ஒப்படைத்தது இந்துக்கள் மத்தியில் மேலும் பல கேள்விகளையும் சந்தேகங்களையும் உருவாக்கியுள்ளன. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியின் விரிவாக்கப் பணிகளுக்காக மட்டும் 27 இந்து கோயில்கள் மற்றும் கலாச்சார நினைவு சின்னங்கள் தகர்க்கப்படுவதைத் தடுக்கும் தீவிர முயற்சியில் அகில இலங்கை இந்து மாமன்றம் இறங்கியுள்ளது. இதேபோல் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி 24 அடி அகலம் கொண்ட வீதியாக வி

By ESAN
2/15/2010 1:27:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக