திங்கள், 15 பிப்ரவரி, 2010

உருவாகிறது புதிய "சக்தி' பீடம்...



முதலமைச்சர் மு.​ கருணாநிதியின் நேரடி மேற்பார்வையில் விரைவாகவும்,​​ எழிலார்ந்த வகையிலும் சென்னையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் தலைமைச் செயலகம் மற்றும் சட்டப் பேரவைக் கட்டடத்தின் பிரம்மாண்டமான வெளிப்புறத் தோற்றம்.
கருத்துக்கள்

தலைவர்களின் பெயர்களை எடுப்பதாகக் கூறி, மூவேந்தர்களான சேர,சோழ, பாண்டிய பெயர்களை எடுத்த கலைஞர் உடனே அரசினர் தோட்டத்திற்குச் சூட்டிய பெயர்தான் ஓமந்தூரார். (தெலுங்கர் குமாரசாமி பெயரையும் பின்னர் முதன்மைச் சாலைக்குச் சூட்டியுள்ளார்) தலைமைச் செயலகம் திகழும் இடத்திற்கு ஓமந்தூரார் அரசினர் தோட்டம் எனப் பெயர் இருப்பது தமிழக அரசையே தலைகுனிய வைக்கும். அவரது பெயரை வேறு அரங்கிற்குச் சூட்டட்டும். அரசினர் தோட்டத்திற்கு ஐந்திணை வளாகம், மூவேந்தர கோட்டை, என்று பெயர் சூட்டட்டும். அல்லது தமிழ்நாட்டு அரசுத் தோட்டம் என்று அழைக்கட்டும். இன உணர்வாளர்கள் உடனே இது குறித்துக் குரல் கொடுக்க வேண்டுகின்றேன். தமிழ்நாட்டிற்குத் தனிக் கொடி கேட்டுப் போராடிய கலைஞர் சோனியாவிடம் உள்ள செல்வாக்கால் போராடாமல் தனிக் கொடி உரிமையைப் பெற்றுத் தமிழக அரசின் கொடியை இக் கோட்டையில் பறக்க விடட்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/15/2010 2:59:00 AM

வாஸ்துப்படி கட்டிட வடிவம் வட்டமாக இருக்கக்கூடாது. ஏற்கனவே பார்லிமென்ட் கட்டடத்தை வட்டமா கட்டி நாடே விளங்காம கெடக்கு. இப்ப சட்டசபையும் வட்டமா கட்டி தமிழ்நாட்டையும் விளங்க விடாம பண்ணிட்டானே, இந்த விளங்காதகருணாநிதி . மதுரைக்காரன்

By மதுரைக்காரன்
2/15/2010 12:22:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக