வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

இலங்கை அகதிகள் முகாமில் போலீஸ் அத்துமீறியதாக புகார்



சென்னை, பிப்.18: இலங்கை அகதிகள் முகாமில் போலீஸôர் அத்துமீறி செயல்படுவதாக உண்மை அறியும் குழுவினர் தெரிவித்தனர். செங்கல்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் நடந்த தடியடி குறித்து உண்மை அறியும் குழுவின் தலைவரும், ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் கழக மாநில அமைப்பாளருமான அ. மார்க்ஸ் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது: இலங்கையிலிருந்து வரும் அகதிகளில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்கள் செங்கல்பட்டில் உள்ள சிறப்பு முகாமில் எந்த வழக்கும் பதிவு செய்யப்படாமல் அடைக்கப்பட்டுள்ளனர். பெயரளவில் இது சிறப்பு முகாம் என்று கூறப்பட்டாலும் இது சாதாரண சிறைச்சாலையை விட மோசமாகவும்அடிப்படை வசதிகள் கூட இல்லாமலும் உள்ளது. இந்நிலையில் அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள், தங்கள் மீது எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படாமல் இருப்பதைக் கண்டித்து பிப்ரவரி 2}ம் தேதி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு அத்துமீறி நுழைந்த காவல்துறை அதிகாரிகள் 150 பேர் அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் பல அகதிகள் படுகாயமடைந்துள்ளனர். மேலும் அவர்களுக்கு எவ்வித மருத்துவ உதவியும் அளிக்கப்படவில்லை. இதனிடையே காவல்துறையினரை தாக்கியதாக அதில் 15 பேர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதனால் இந்த அத்துமீறலை நிகழ்த்திய காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர். இந்த சந்திப்பின் போது குடியுரிமை பாதுகாப்பு நடுவத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் தமயந்தி, விநாயகம், அன்பரசு ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்துக்கள்

காங்கிரசின் தூண்டுதலால் சிங்களத்தின் கோரிக்கைக்கேற்ப புலம்பெயர்ந்தோர்மீது அக்கரை இருப்பதாக நடிக்கும் அரசு இப்பொழுது ஏன் தன் உண்மை முகத்தைக் காட்ட வேண்டும்? இன நேயம் இல்லாவிட்டாலும் மனித நேயத்துடன் நடந்துகொண்டால் புலம் பெயர்ந்தோர் அனைவரையும் விடுவி்க்க வேண்டும். அல்லது புலம் பெயர்ந்தோருக்கு அடைக்கலம் தரும் நாடு ஒன்றிற்கு அனுப்பி வைக்க வேண்டும். வருங்காலத்தில் ஒட்டு மொத்த தமிழினம் மீதே பழி சொல்லும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/19/2010 2:44:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக