-----------------
சென்னை :""சுதந்திரமடைந்த இந்நாட்டில் சுயாட்சி கோருவது தவறல்ல. சுயாட்சி கோரிக்கைக்கு இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களின் ஆதரவு கிடைக்கும்,'' என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:ஆட்சிப் பொறுப்புக்கு வந்தாலும், வராவிட்டாலும், என்றும் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் நிலை தொடர்ந்தாலும், இந்தியாவில் ஜனநாயகத்தைக் காத்திட வேண்டும்.தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ உழைக்க வேண்டும். அந்தப் பூங்காவை காத்திடும் பணியை அமைதியாகவும், ஆர்ப்பாட்டமின்றியும், அன்னியருக்கு இடம் கொடாத வகையிலும் கடைப்பிடித்து நிறைவேற்றிட வேண்டும்.இதை உறுதி பூண்டு, ஒத்துழைப்பு தருகிற இந்த இயக்கத்தை தலைமை ஏற்று நடத்துகிற தகுதி, திறமை தி.மு.க.,வுக்கு உண்டு.சென்னையில் நான் நடத்திய மாநில சுயாட்சி மாநாட்டில் எஸ்.எம்.கிருஷ்ணா கலந்து கொண்டு பேசினார். காஷ்மீரில் பரூக் அப்துல்லா மாநில சுயாட்சி கொள்கை மாநாடு நடத்திய போது சாதிக் பாட்ஷா கலந்து கொண்டார்.ஜோதிபாசு, மேற்கு வங்கத்தில் மாநில அதிகாரங்களை மேலும் பெறுவதற்கு வலியுறுத்துகிற நியாயமானதீர்மானங்களை நிறைவேற்றினார்
கடிகாரத்தின் முள் சுழன்றால் அதன் தொடர்ச்சியாக காலண்டரில் நாட்கள் சுழலும். அப்படிச் சுழன்ற போதுஎத்தனையெத்தனை இடங்களுக்கு, நாடுகளுக்கு சுயாட்சியும், சுதந்திர ஆட்சியும் கிடைத்திருக்கிறது என்பதை நன்றாகவே அறிவோம்.கத்தியின்றி, ரத்தமின்றி, யுத்தம் ஒன்று வருகுது என்ற பழம் பெரும் சுதந்திரப் பாடலை நினைவிலே நிறுத்தி, சுதந்திரமடைந்த இந்நாட்டில் சுயாட்சிகோருவது தவறல்ல.மாலை தங்கத்தால் ஆனதாயினும்,மரகத மணிகளால் ஆனதாயினும் ஒவ்வொரு மணியையும் இணைத்திருக்கிற, "கொக்கி' வலிமையாக இருந்தால் தான் மாலைக்கு வலிவு. அந்த வலிவுக்கு நாம் வைத்துள்ள பெயர் தான் மாநில சுயாட்சி.நாம் வலியுறுத்துகிற மாநில சுயாட்சிக்கு இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களின் ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன்.இவ்வாறு கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக