சனி, 20 பிப்ரவரி, 2010

தமிழில் பொறியியல், மருத்துவ படிப்புகளை வழங்க அரசு முயற்சி



சென்னை, பிப்.19: பொறியியல், மருத்துவப் படிப்புகளை தமிழில் சொல்லித்தர அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது என்று உயர் கல்வி அமைச்சர் க. பொன்முடி தெரிவித்தார்.சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 30-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.தமிழக பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநர் பர்னாலா பட்டங்களை வழங்கினார். சிறந்த மாணவர்களை உருவாக்க கற்பிக்கும் முறையில் மாற்றம் தேவை. அண்ணா பல்கலைக்கழகத்தில் நவீன வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக துணைவேந்தர் தெரிவித்தார். பள்ளிப் படிப்புகளில் பாடங்களை மனப்பாடம் செய்யும் பழக்கம் அதிகமாக உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். மாணவர்கள் தொடக்கக் கல்வி பயிலும் போதே அவர்களுக்கு பார்த்து அறியக் கூடிய, செய்து பார்க்கக் கூடிய வசதியை ஏற்படுத்த வேண்டும்.பள்ளியில் மனப்பாடம் செய்து படித்த ஆங்கில செய்யுள் பாட்டுக்கு இன்று வரை அர்த்தம் புரியவில்லை. தாய்மொழியில் படிக்கும் போது சிந்தனைத் திறன் அதிகரிக்கும். அதற்காக ஆங்கிலத்தை புறந்தள்ளுங்கள் என்று சொல்லவில்லை. தேவையானதற்கு மட்டும் ஆங்கிலத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.ஆங்கில மொழியில் வழங்கப்படும் பொறியியல், மருத்துவப் படிப்புகளை, தமிழில் சொல்லித் தருவதற்கான முயற்சியை அரசு மேற்கொண்டுள்ளது' என்றார்.பல்கலைக்கழகத் துணை வேந்தர் மன்னர் ஜவஹர் ஆண்டறிக்கை வாசித்தார்.
கருத்துக்கள்

பொன்முடி அவர்கள் பழைய இயக்க வாதிபோல் சரியான கருத்துகளைத் திறம்படவே பேசுகிறார். ஆனால் தமிழ்நாட்டில் தமிழ்தான் என்னும் நிலைமை வர ஏன் நடவடிக்கை எடுக்க இயலவில்லை என்றுதான் தெரி யவில்லை. அமைச்சரவைக் கூட்டத்தில் வலியுறுத்தி வரும் கல்வி ஆய்டு முதலே எல்லா வகுப்புகளிலும் தமிழை மொழிப்பாடமாக அறிமுகப்படுத்தவும் உயர்கல்வி முடியவும் தமிழ் வழிக் கல்வியை உடனே அறிமுகப்படுத்தவும் ஆவன செய்வாராக! தமிழால் ஆட்சிக்கு வந்தும் தமிழைப் புறக்கணிப்பதால் தீராப் பழிக்கு ஆளாகியுள்ள ஆட்சியாளர்களுக்கு நற்பெயர் கிட்ட வழி வகுப்பாராக! தமிழ்நாட்டில் தமிழுக்கே தலைமை தமிழர்க்கே முதன்மை என்னும் நிலை வரப் பாடுபடுவாராக! எனவே. உயர் பொறுப்புகளில் தமிழறிந்த தமிழர்களையே நியமிக்க ஆவன செய்வாராக!

மன்றாடி வேண்டும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/20/2010 10:22:00 AM

Learning everything in the mother language helps to improve the knowledge. It is very easy to learn every thing in the mother language. More number of students in rural area can get higher education if it is thought in tamil.

By G.Prabakaran
2/20/2010 7:49:00 AM

தமிழில் ஒரு Telephone Directory கொண்டு வாங்க. தமிழில் எடுக்கப்படும் பேசும் பேய்ப் படங்களின் வசனம் தமிழில் இருந்தால் அவற்றிற்கு களைஞர் விருது கொடுத்து விழா எடுங்கள். பாட புத்தகங்களைத் தமிழில் தேர்வு செய்ய தமிழ் நாட்டில் குடியேறிய பிறமொழி நடிக நடிகையர்கொண்ட ஓர் அணி ஏற்படுத்துங்கள். தமிழனைத் தமிழ் நாட்டில் சிறை வைய்யுங்கள். தமிழ் நாட்டு மந்திரிகளைத் தயங்காமல் டெல்லி போய் வாங்கிற சம்பளத்துக்கு ஒழுங்கா வேலையை பாக்கச் சொல்லுங்களேன். சரிங்க. உங்க வீட்டுப் பிள்ளைகள் எல்லாம் பிரன்ச் மீடியமா? ஜப்பனீஸ் மீடியமா படிக்கிறார்கள்?

By mohan
2/20/2010 6:21:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக