திங்கள், 15 பிப்ரவரி, 2010

தமிழக அரசை எதிர்த்துப் போராடத் தயங்க மாட்டோம்: தங்கபாலு



சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தி 70}வது பிறந்த தின நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ.​ தங்கபாலுவுக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார் ராம சுகந்தன்.​ உடன் சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் டி.​ சுதர்சனம்,​​ அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கே.​ சிரஞ்சீவி.
சென்னை,பிப்.14: ​ காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கட்டளையிட்டால்,​​ தமிழக அரசை எதிர்த்துப் போராட தயங்க மாட்டோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வீ.​ தங்கபாலு தெரிவித்தார்.தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் 70}வது பிறந்த தினத்தை முன்னிட்டு,​​ தீவிரவாத}பயங்கரவாத எதிர்ப்பு கருத்தரங்கம் சென்னை காமராஜர் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.அந்நிகழ்ச்சியில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப.​ சிதம்பரம்,​​ மக்கள் பிரச்னைகளை முன்வைத்துப் போராடாதவரை காங்கிரஸ் வளர முடியாது என்று கூறினார்.அடுத்துப் பேசிய தங்கபாலு,​​ காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கட்டளையிட்டால் போராடத் தயங்க மாட்டோம் என்று கூறினார்.நிகழ்ச்சியில் கார்த்தி சிதம்பரம்​ பேசியதாவது:தமிழகத்தில் கடந்த 42 ஆண்டுகளாக நம்முடன் கூட்டணி அமைத்த திராவிடக் கட்சிகள்தான் ஆட்சியில் அமர்கின்றன.​ ஒரு அரசியல் கட்சிக்குப் பிரசாரமும்,​​ போராட்டமும்தான் முக்கிய அடையாளங்கள்.​ ஆனால்,​​ தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை நம்மிடம் பிரசாரமும் இல்லை,​​ போராட்டமும் இல்லை.மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு விவசாயிகளின் ரூ.70 ஆயிரம் கோடி கடனைத் தள்ளுபடி செய்தது.​ லட்சக்கணக்கான மாணவர்களுக்குக் கல்விக் கடன் வழங்கியுள்ளது.​ ஆனால் இந்த சாதனைகளை பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மக்களிடம் எந்தப் பிரசாரமும் செய்யவில்லை.கூட்டணி என்ற காரணத்துக்காக இங்கு நடைபெறும் ஆட்சியை எதிர்த்து ஒரு போராட்டம் நடத்த கூட நாம் தயங்குகிறோம்.​ நம்மால் ஆட்சியிலும் பங்குபெற முடியவில்லை.​ ஆட்சியை விமர்சனமும் செய்ய முடியவில்லை.இந்த அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் நம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒரு நாள் கூட பேசியதில்லை.​ ஆனால்,​​ இப்போது வாழப்பாடி ராமமூர்த்தி இருந்திருந்தால் நிச்சயமாக இந்த மெüனம் இருந்திருக்காது.மக்கள் பிரச்னைகளுக்காகப் போராட்டம் நடத்த வேண்டும்;​ அரசை எதிர்த்து விமர்சனம் செய்ய வேண்டும்.​ அப்போதுதான் மக்களுக்கு காங்கிரஸ் கட்சி மீது நம்பிக்கை வரும்.​ அத்தகைய நிலை ஏற்பட்டால் தமிழ்நாட்டில் விரைவிலேயே காங்கிரஸ் தலைமையில் தனி கூட்டணி அமைக்க முடியும் என்றார் கார்த்தி சிதம்பரம்.தயங்க மாட்டோம்:​​ அதன் பின்னர் விழாத் தலைவரான,​​ தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வீ.​ தங்கபாலு பேசியதாவது:​ நான் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது பல போராட்டங்களை நடத்தியவன்தான்.​ பல முறை சிறைக்கும் சென்றுள்ளேன்.​ ஆனால்,​​ இன்று கூட்டணி ஆட்சி முறை என்பது கட்டாயம் ஆகியுள்ளது.​ இந்தச் சூழலில் இந்தியாவை காங்கிரஸ் கட்சி ஆள வேண்டும் என்பதற்காக,​​ தமிழ்நாட்டில் நாம் சில தியாகங்களை செய்ய வேண்டியுள்ளது.கட்சித் தலைவர் சோனியா காந்தியின் கட்டளை எதுவோ,​​ அதை ஏற்று செயல்படுவதுதான் நம் கடமை.​ ஒருவேளை,​​ தமிழ்நாடு அரசை எதிர்த்துப் போராடுமாறு சோனியா காந்தி கட்டளையிட்டால்,​​ சட்டப்பேரவையில் இந்த அரசுக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் குரல் நிச்சயம் ஒலிக்கும்.​ தமிழ்நாடு முழுவதும் நம் கட்சித் தொண்டர்கள் இந்த அரசுக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராடுவார்கள்.​ போராட்டத்தைக் கண்டு நாம் யாரும் தயங்கவில்லை என்றார் தங்கபாலு.இக்கூட்டத்தில் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.​ சுதர்னம்,​​ மாநில முன்னாள் தலைவர் குமரி அனந்தன்,​​ எம்.பி.க்கள் கே.எஸ்.​ அழகிரி,​​ பெ.​ விஸ்வநாதன்,​​ முன்னாள் எம்.எல்.ஏ.​ உ.​ பலராமன் உள்ளிட்டோர் பேசினர்.வாழப்பாடி ராம.​ சுகந்தன் வரவேற்றார்.​ வாழப்பாடி ராம.​ கர்ணன் நன்றி கூறினார்.
கருத்துக்கள்

உலகறிந்த உண்மை. தமிழகக் காங்கி.ற்கு என்று தனிக் கொள்கை கிடையாது. மாநில உணர்வுகளை மத்திய அமைப்பில் எதிரொலிப்பதும் கிடையாது. மத்தியத் தலைமை சாயும் பக்கம் சாயும் செம்மறியாட்டுக் கூட்டம்தான். கொத்தடிமை உணர்வால் குளமாவது மேடாவது எனத்தமிழகப் பகுதிகளையும் வடவேங்கட எல்லையையும் இழநதும் அடிமைத் தன்மைகளைக்காலம் காலமாகக் கட்டிக் காக்கும் கட்சிதானே! எனவே, சோனியா கூட்டணி மாற விருமபினால் தடாலடியாகத் தம் கொளகையை மாற்றிக் கொண்டு - கொள்கை என்று எதுவும் இல்லாவிட்டாலும், யாரைத்தூக்குவது யாரைத்தாக்குவது என்னும் அரசியல் சாயத்தை மாற்றிக் கொண்டு, தமிழக அரசைத் தாக்கத்தான் செய்வார்கள். இப்படிப்பட்டவர்களுடன் கூட்டணி வைப்பதைத்தான் திராவிடக் கட்சிகள் பெருமையாகக் கருதித் தமிழர் உரிமைகளையும் நலன்களையும் காவு கொடுக்கின்றனர். எனவே, சோனியாவுடனான பேரங்களைப் பொறுத்தே தமிழக அரசியல் அமையும என்ற உண்மையை ஒத்துக் கொண்டார். இதை மீறும் கோவன்களைக் கட்சியை வி்ட்டு நீக்கலாமே!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/15/2010 2:49:00 AM

continued

By Ibrahim
2/15/2010 1:58:00 AM

Atleast you have agreed that there are lot of reasons to protest this government.What Thangabalu is talking? To rule India do they have to do some sacrifices in Tamil Nadu? Being a mute spectator to all corruptions happening in this regime, looting, murders (Mr.Krishnasamy, former TNCC President) had a narrow escape), attack on Elangovan & Karvendan houses, violent & brutal attack by police in the High Court premises, Power-hungry MK's family, undue advantage given to MK's family members in administration, ministry and representation in various forums, MK famil's mammoth business dealings, Spectrum scandal, killing of innocent staff in Dinakaran office (Azhagiri & Dayanidhi are shameless to hug each other after this episode), Law & Order, worst crime rate(Panaiyur mdouble murder, Anna Nagar Double murder, Tirunelveli SI murder in daylight, negligent attitude of the ministers present there, police ruthless attack in Nilakkottai, winning by-election using money & muscle power, violent Ch

By Ibrahim
2/15/2010 1:51:00 AM

குற்றம் இருந்தால் அதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியதுதானே? அநியாயம் நடந்தாலும் கட்சி தலைமை சொல்லவில்லை என்றால் அது நியாயமாகிவிடுமா? நல்ல தமாஷ்.

By pannaadai
2/15/2010 12:46:00 AM

வாழப்பாடி ஒரு மனுஷன் அவனுக்கு பொறந்த நாள் வேறயா? என்ன அநியாயம்ட இது? தி மு கா வை எதிர்த்து போராட்டம் பண்ணுன்னு சோனியாம்மா சொன்னா நீ உடனே ஆரம்பிச்சுடிவியா? சோனியா எங்கே சொல்லப் போறாங்க? இது நடக்கிற காரியமா? சோனியாவுக்கு உன் விசுவாசத்தை எப்படியெல்லாம் தெரியப்படுத்தரடா,ஜால்ரா சத்தம் தாங்க முடியலைடா சாமி.

By வாழப்பாடி வாழை மட்டை
2/15/2010 12:25:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக