பெரியகுளம், பிப். 18: கோவில்பட்டி, ஜெயங்கொண்டம் ஆகிய தொகுதிகளின் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எடுத்த முடிவைத் தொடர்ந்து, மேலும் பல அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது தொகுதிகளில் நலப் பணிகளை மேற்கொள்ள விரைவில் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து மனு அளிக்க உள்ளனர் என்று சட்டப்பேரவை முன்னாள் தலைவரும் தி.மு.க. தேர்தல் பணிக் குழுச் செயலருமான சேடபட்டி முத்தையா வியாழக்கிழமை பெரியகுளத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: பல அதிமுக எம்.எல்.ஏ.க்கள் முதல்வரைச் சந்திப்பதைத் தவிர்ப்பதற்காக, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்துவிடும் என்று ஜெயலலிதா கூறி வருகிறார். 2011 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு அதிமுக காணாமல் போய்விடும் என்று மத்திய அமைச்சர் மு.க. அழகிரி ஏற்கெனவே தெரிவித்துள்ளார். ஆனால், தற்போதைய சூழ்நிலையைப் பார்க்கும்போது, தேர்தலுக்கு முன்னரே அக் கட்சி காணாமல் போய்விடும் என்றார் சேடபட்டி முத்தையா.
கருத்துக்கள்
அடடா! இப்படி ஒருத்தர் இருக்கிறார் என்பது இபபொழுதுதானே தெரகிறது!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
2/19/2010 3:41:00 AM
2/19/2010 3:41:00 AM
Yes it is completely true; when Tamil Nadu will be split into two and owned and ruled by two dictator brothers how can AIADMK or any other political party other than DMK can survive Nandri Padaiyachi Magan
By Padachi Magan
2/19/2010 3:34:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
2/19/2010 3:34:00 AM