போர்க்குற்றங்களையும் ஆவணப்படுத்த ஓர் அவசர வேண்டுகோள்.
போரால் பாதிக்கப்பட்டோரை பாதுகாக்கவும் மனித உரிமைகளை பேணவும் எமது நடுவம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நடுவம் அனைத்துலக நாடுகளின் நியமங்களுக்கு ஏற்ற முறையிலும், மனித உரிமை தகவல்களை ஆவணப்படுத்தும் அமைப்பு என அழைக்கப்படும் கூறிடொக்ஷ்ஸ் (HURIDOCS) அமைப்பினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தகவல் ஆவணப்படுத்தும் முறைகளை பின்பற்றி மனித உரிமை மீறல்களை பதிவு செய்கின்றது.
இப் பணியானது இலங்கை விடுதலை பெற்ற நாளிலிருந்து குறிப்பாக 1958 லிருந்து அண்மைக் காலம் வரை இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களால் தமது குடும்பத்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர்களை இழந்து தவிக்கின்ற குடும்பத்தினர்களிடமிருந்து தகவல்களைச் சேகரித்து ஆவணப்படுத்தி சர்வதேச மனித உரிமை அமைப்புகனிற்கு சாட்சிகனைத் தொகுத்து வழங்கும் வழிமுறைகளை பின்பற்றுகின்றது. இதன்மூலம் எமது நாட்டில் தமிழ் மக்களிற்கு ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பான வலுவான தகவல்களை சர்வதேசத்திற்கு வழங்கமுடியும்.
உலகத்தில் காலத்திற்குகாலம் போர்க் குற்றங்களும் மனிததத்திற்கு எதிரான குற்றங்களும் இழைக்கப்பட்டு வந்துள்ளன என்பதற்கு, ஐரோப்பாவில் யூதர்கள், ரோமானியர்கள், யூகோஸ்லாவிய முஸ்லிம்கள், அல்பேனிய கொசோவோக்கள், குரோசியர்கள், ஆர்மேனியர்கள் ஆபிரிக்காவில் ருவாண்டா புறூண்டி மக்களும்., கம்போடியர்கள், கிழக்கு திமோனியர்கள், பாலஸ்தினியர்கள், அண்மையில் இலங்கைத் தமிழர்கள் ஆகியோர்களுக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கைகளைக் குறிப்பிடலாம்.
எனவே அண்மையில் இலங்கையில் யுத்தத்தினால் ஏற்பட்டமரணங்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றை நேரிலே பார்த்தவர்கள,; அவற்றினால் பாதிகக் ப்பட்டவர்கள் அவற்றை தெரிந்தவர்கள் அவர்கள் பாதிப்புகள் பற்றிய தகவல்களை தாமாக முன்வந்து தந்துதவுமாறு மனித உரிமைகள் நடுவம் மிகவும் பணிவுடன் வேண்டிக்கொள்கிறது. ரோரன்ரோவில் உள்ள எமது நடுவம் அவுஸ்திரேலியா, நியுசிலாந்து, பெல்சியம், ஒல்லாந்து, ஜேர்மனி, நோர்வே, சுவீடன், டென்மார்க் ஆகிய நாடுகளிலுள்ள மனித உரிமை நடுவகங்களூடன் இணைந்து பெப்ருவரி 15ஆம் நாள் தொடக்கம் எப்பிரல் 15 வரை இலங்கையில் போரால் பாதிக்கப்பட்டவர்களினதும் மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாக்கப்பட்டவர்களினதும் விபரங்களை ஆவணப்படுத்தும் நாட்களாக பிரகடனப்படுத்தியுள்ளோம்.
தேசிய, அனைத்துலக மனித உரிமை நிறுவனங்கள், ஐக்கிய நாடுகள் அமைப்புகள் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களை விசாரக்குட்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டதை நாம் மனதில் இருத்தி, எமது முயற்சிகளை முனைப்பாக்க வேண்டும். உங்கள் உறவினர்கள், நண்பர்கள் தெரிந்தவர்கள் கொலை செய்யப்பட்டிருப்பின் காணமால் போயிருப்பார்களாயின், சட்டத்துக்கு மாறாக கைது செய்யப்படடிருப்பின், காயப்பட்டிருப்பர்களாயின், அல்லது எதாவது மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பார்களேயானால் எம்மிடம் தொடர்பு கொண்டு விபரங்களை பதியுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நீங்கள் தரும் விபரங்கள் அனைத்தும் இரகசியமாக பேணப்பட்டு நீதிமன்றத்தில் மட்டும் உங்கள் அனுமதியோடு சமர்ப்பிக்கப்படும். போர்க்குற்றங்கள், மனித இனத்துக்காக குற்றங்கள், இனப்படுகொலைகள் விசாரணைகள் வெற்றிபெற வேண்டுமாயின் எமது மக்களின் மேல் இழைக்கப்பட்ட அனைத்து நிகழ்வுகளும் முழுமையான, நம்பத்தகுந்த உண்மையான விபரங்களுடன் சமர்ப்பிக்கப்படவேணடு; ம். எமது முயற்ச்சிக்கு உங்களது முழுமையான ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றோம் மேலதிக தகவல்களுக்கு தொலைபேசி 416 628 1408
மின்னஞ்சல:info@cwvhr.org
or
www.cwvhr.org
Belgium
> infobelgium@cwvhr.org
Denmark
> infodenmark@cwvhr.org
France
> infofrance@cwvhr.org
Grmany
> infogermany@cwvhr.org
Holland
> infoholland@cwvhr.org
Italy
> infoitaly@cwvhr.org
Norway
> infonorway@cwvhr.org
Swiss
> infoswiss@cwvhr.org
Sweden
> infosweden@cwvhr.org
Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 3624
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக