வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

ராமேசுவரம் மீனவர் படகுகள் மீது இலங்கை கடற்படை சுட்டதுராமேசுவரம், பிப். 18: நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களின் படகுகள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டனர். மேலும் படகில் இருந்த மீன்பிடி வலைகளை வெட்டி அவர்கள் கடலில் மூழ்கடித்தனர்.இதுகுறித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:ராமேசுவரத்தில் இருந்து பிப்ரவரி 17-ம் தேதி சுமார் 100 விசைப்படகுகள் கடலில் மீன் பிடிக்கச் சென்றன. இந்தப் படகுகள் இந்திய, இலங்கை கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, புதன்கிழமை இரவு அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் படகுகளின் மேல்புறம் நோக்கி சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டு மீன் பிடிக்க விடாமல் எச்சரிக்கை விடுத்தனர்.உடனே ராமேசுவரம், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த சேசு, இருதயம் ஆகியோரது படகுகள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீன்பிடி வலைகள் மற்றும் தளவாடப் பொருள்களை இலங்கை கடற்படையினர் அரிவாளால் சேதப்படுத்தி கடலில் மூழ்கடித்தனர்.
கருத்துக்கள்

இந்தியன் என்பதால் பெருமை கொள்வதாகக் கருத்து பதிபவர்கள், தம் நாட்டு மக்களையே அண்டை நாட்டுப்படையினால் சாகடிக்கச் செய்யும் இந்திய அரசு பற்றி என்ன நினைக்கிறார்கள்? தமிழக மீனவர்கள் இந்தியர் அல்லர் எனக் கருதினால் ஒட்டு மொத்தமாக அனைத்து மீனவர்களையும் சிங்களப்படையிடம் பிடித்துக் கொடுத்துவிட்டு வந்துவிடலாம். வேண்டுமெனறே பழிவாங்கும் மத்திய அரசுடன் கையால்ஆகாத மாநில அரசு துணை போகலாமா? நல்ல எதிர்ககட்சி இல்லாக் காரணத்தால் தமிழ்நலச் செயற்பாடற்ற ஆளுங்கட்சியைச் சந்திக்க வேண்டிய நிலையில் தமிழர்களின் தீயூழ் அமைந்துள்ளது. கட்சிக் கொத்தடிமைகளில் சிக்கியுள்ள மக்களிடமோ மனித நேயம் மடிந்து விட்டது. இதே நிலை நீடித்தால் வன்முறையாளர்கள் தமிழ்நாட்டிலும் தங்க்ள் கை வரிசையைக் காட்டத் தொடங்கி விடுவார்கள். வாழ்விழக்கும் தமிழர்கள் அவர்கள்பக்கம் சாய்வார்கள். எனவே, இந்தியக் கண்டத்தின் அமைதி, ஒற்றுமை கருதியாவது கைகட்டி வாய் பொத்தி இருக்கும் அரசுகள் விரைந்து செயற்பட வேண்டும். ஆனால் செயல்படாது என்பதே வரலாறு காட்டும் உண்மை. எனவே, மக்கள் செயல்பட்டு மாற்றத்தை உண்டாக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/19/2010 3:27:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
+++++++++++++++++++++++++++++++++++++++++++++

கருத்துக்கள்

ஏற்கெனவே எழுதியுள்ளேன். கருத்திற்குக் கருத்து என எழுதத் தெரியாவிட்டால் அமைதியாக இருக்கலாம். என் மீது கோபம் கொண்டு உலகப் பொதுமறை தந்த தெய்வப் புலவர் பெயரை இழிவாகக் குறிக்க வேண்டா. தம் பெயரில் கூட ஆங்கிலத்தைச் சேர்ப்பவர் தமிழ் என்று கூறினாலோ தமிழன் என்று எழுதினாலோ தமிழர் ஆக மாட்டார் என்பதைத் தினமணி வாசகர்கள் நன்கு அறிவார்கள். தமிழக மீனவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள்;வன் கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்; ஆனால் இந்திய மீனவர்கள் என்று எழுதப்படுகிறது. எங்களது கேள்வியே இந்திய மீனவர்கள் எனக் கருதி அவர்களைப் பாதுகாக்காதது ஏன் என்பதுதானே! காங்கிரசின் தமிழ்நல எதிர்ப் போக்கு என்பது உலகம் அறிந்தது. எனவே தான் தமிழக மீனவர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுப்பது இல்லை.இனியேனும் திருந்தட்டும் தமிழகம்! தமிழுக்குத் தலைமை அளித்துத் தமிழர்க்கு முதன்மை அளிக்கட்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/19/2010 6:25:00 PM

பெரும்பாலான முதலாளித்துவ நாடுகளில் ஏழை மக்களை வருத்தி, சுரண்டி முதலாளிகள் ஏப்பம் விடுகிறார்கள். இதற்கு இந்தியா ஒரு நல்ல உதாரணம். இந்தியாவில் இந்த முதலாளி வர்க்கம்தான் அரசை கட்டுபடுத்துகிறது. தமிழ் நாட்டு தமிழர்களை கட்டுப்பாடில் வைத்து இருந்தால்தான், ஈழத்தமிழரையும் கட்டுப்பாடில் வைத்திருக்கலாம் என்று இந்தியா நினைத்து, அதை கச்சிதமாக சிங்களவனில் உதவியால், நடைமுறைபடுதுகிறது. இந்தியாவிலேயே பெரும் முதலாளியான கருணாநிதி எத்தனையாயிரம் தமிழ்நாட்டு ஈழ தமிழரரின் உயிர், வாழ்வு, உரிமை, வாழ்வாதாரம் எல்லாவற்றையும் விலை கொடுத்து உலகிலேயே பெரும் பணகாரனகி விடுவார்.

By Queen
2/19/2010 4:00:00 PM

பிரச்சினையின் மூல காரணம் இந்திய மீனவர்கள் இரட்டை மடி வலை பயன்படுத்தி கடல் மாதாவின் குஞ்சு, குளுவான் மீன்களையும் ற்றவாலர் படகுகளில் அள்ளி வருவதுதான் காரணம். இங்கு கருத்து பதிவு செய்யும் குறு லொள்ளுவர்க்கு ஈழம் ஈழம் என்று வாந்தி எடுக்க தெரியுமே தவிர தொழில் சார்ந்த்த குடா நாட்டு மீனவர்களுக்கும் இந்திய மீனவர்களுக்கும் உள்ள பனிப் போரை பற்றி ஒன்றும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. மூன்று தசாப்தங்களுக்கு பிறகு எப்போது தான் குடா நாட்டு மீனவர்கள் தங்களின் பாடுகளை ஆரம்பித்துள்ளார்கள். இரு நாடுகளுக்கு இடையில் கடல் எல்லையின் அளவு குறைவு. இந்திய மீனவர்களின் இரட்டை மடி வலை பாதிப்பை அவர்களின் காவற்துறையிடம் முறையிடுகிறார்கள். இந்த வாரத்திலியே ராமேஸ்வரத்தில் நமது அதிகாரிகள் பலபடகுகளையும் பிடிபட்ட மீன்களையும் லாரிகளில் ஏற்றி சென்றார்கள்

By Also Tamil
2/19/2010 11:27:00 AM

அத்து மீறும் சிங்களனை புத்தரின் வழித்தோன்றல்கள் எனவும் தமிழர்களுக்கு பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருந்த புலிகளை தீவிரவாதிகள் என்றும் இந்த உலகம் முத்திரை குத்தி வைத்திருக்கிற வரையும் இந்த அவலம் தீராது. பலமான எதிர்க்கட்சிகள் இல்லாத நிலையில் பொன்சேகா வாயை திறந்து ஏதாவது உண்மையை சொன்னால் மட்டுமே ராஜபக்சே, கருணாய், முசோனியாவின் வீழ்ச்சி ஆரம்பமாகும். அது வரை அவர்களின் கொட்டம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

By நவீன் சென்னை
2/19/2010 11:27:00 AM

இப்படியே போனால் ஒருநாள் புதிய சட்டமன்றத்துக்குள் சிங்களப் படை புகுந்து எம்.எல்.ஏ.க்களை அள்ளிப்போகப் போகிறது. அந்த திருநாள் தொலைவில் இல்லை.

By எரித்திரியன்
2/19/2010 9:29:00 AM

சேது சமுத்திர திட்டத்திற்கு மாற்றுப் பாதை அமைப்பது குறித்து ஆய்வு நடத்த, தேசிய கடல்சார் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் நாகப்பட்டினம், ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன் உள்பட 8 இடங்களில் மிதவைக் கருவிகள் மிதக்க விடப்பட்டுள்ளன. இந்திய கடல் எல்லையில் உள்ள 5 ம் தீடை பகுதியில் படகில் கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்த சேது சமுத்திர திட்ட ஊழியர்களை ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அடித்து உதைத்து விரட்டினார்கள். more info Nakkeeran.com

By Bala buthar
2/19/2010 7:08:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக