சென்னை, பிப்.13: தமிழர்களுக்கு இலங்கை அரசு அதிகாரப் பகிர்வு அளிக்கவில்லை என்றால் தி.மு.க. அதை வேடிக்கை பார்க்காது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
÷இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
÷இலங்கை அதிபர் தேர்தலின் போது தமிழர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அந்நாட்டு அதிபர் ராஜபட்ச முன் வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
÷தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை தேர்தல் முடிந்த பின் நிறைவேற்றுவதுதான் நியாயமான, நாணயமான ஜனநாயகமாக இருக்க முடியும்.
÷அதிலும் குறிப்பாக, இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு என்ற அடிப்படையில் ராஜபட்ச அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையென்றாலும், தாமதப்படுத்தினாலும் தி.மு.க. அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.
÷இங்குள்ள தி.மு.க. அரசின் சார்பாக மத்திய அரசை வலியுறுத்தி ஆவன செய்யத் தயங்காது.
பொன்சேகா கைது... ÷அதிபர் தேர்தலில் தோல்வியுற்றபின் கைது செய்யப்பட்டுள்ள பொன்சேகாவுக்கு மரண தண்டனை விதிக்கப் போவதாக செய்திகள் பரவுகின்றன.
÷இலங்கை வரலாற்றில் அந்தக் காலத்திலும், இந்தக் காலத்திலும் யார் யாரெல்லாம் பழி வாங்கப்பட்டார்கள், கொலையுண்டார்கள் என்பதெல்லாம் நமக்குத் தெரியும்.
÷அதேநேரத்தில், இந்திய வரலாற்றில் அலெக்சாண்டரிடம் தோல்வியுற்ற புருஷோத்தம மன்னனை, அலெக்சாண்டர் எப்படி நடத்தினார் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
÷இந்தச் சரித்திரக் குறிப்பை இலங்கை ஆட்சியாளர்கள் மறந்திருக்க நியாயமில்லை.
÷சேது திட்டம்... சேது கால்வாய் திட்டத்தை தி.மு.க. நிர்பந்திக்காதது ஏன் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் கேள்வி எழுப்பியுள்ளார்.
÷சேது திட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி நிபுணர் குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழு தனது அறிக்கையை இன்னமும் தாக்கல் செய்யவில்லை. ÷அதனாலேயே சேது கால்வாய் திட்டத்துக்கான பணிகளில் சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பது பிருந்தா காரத்துக்கு தெரிந்த விஷயங்கள்தான்.
÷சேது கால்வாய் திட்டத்தை மாற்று வழியிலேயே நடைமுறைப்படுத்தலாமா என்று மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது. ÷
அதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், சேது திட்டத்தை முடக்குவதற்காகப் பாடுபட்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை நோக்கி கேள்வி கேட்க முடியவில்லை.
÷சேது திட்டம் வரவேண்டும் என்பதற்காக தி.மு.க.தான் முழு முதல் காரணமாக இருந்தது. ÷இதை மறந்துவிட்டு, அல்லது மறைத்துவிட்டு, சேது திட்டத்துக்காக மத்திய அரசை ஏன் நிர்பந்திக்கவில்லை என்று தி.மு.க.வைப் பார்த்து கேள்வி கேட்பதுதான் வியப்புக்குரியதாக இருக்கிறது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.
தமிழக வாக்காளர்களுக்கு எத்துணையோ நல்ல திட்டங்களைச் செயற்படுத்தி வரும் கலைஞர் அவர்கள் அடிக்கடி ஈழத் தமிழர்கள்பற்றிப் பேசி அங்கு நடைபெற்ற பேரினப்படுகொலையில் இந்திய அரசின் பங்கையும் தமிழக அரசின்உடந்தையையும் நினைவு படுத்தி எதிர்ப்பை ஈட்டுகிறார் என்று தெரியவில்லை. தமிழ் மக்களுக்கு எனத் தனி நிலம் எதுவும் இல்லாமல் சிங்களர்கள் மத்தியில் தமிழ்க்கொத்தடிமைகள் வாழும் நிலை ஏற்படுத்திக் கொண்டிருக்கையில் தமிழ் மாநிலம் எவ்வாறு அமைக்க முடியும் என்று இந்திய அரசே கேட்கும் பொழுது மீண்டும் அலெக்சாண்டர் புருசோத்தமன் கதையைக் கூறப்போகிறாரா? குடும்பத்தலைவர் மறைந்தபின் பொறுப்பேற்றுக் கொண்ட மூத்தவர் தன் சொற்களில் இருந்து தடம் புரளும் பொழுது இளையோர் தட்டிக் கேட்பது நியாயமே அன்றி அவர்களைப் பகையாகக் கருதக் கூடாது. எனவே, அன்பின் காரணமாக வேண்டுகின்றேன். இனியேனும் ஈழத்தமிழினம் பிழைக்க வழி காண்க. தமிழ் ஈழம் உயிர்த்து எழ உதவுக.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
2/14/2010 1:37:00 AM
@raj: i agree with you. Indian Bureaucrats/Administrators do not have Spinal cord . They just wnated to satisfy nehru's family.
2/14/2010 1:36:00 AM
ஆயுதம் கொண்டு ஒருவனைத்தாக்குவதைவிட நரித்துரோகத்தனம் மிகவும் பாவமானதும் மன்னிப்பு இல்லாததும் ஆகும். எந்தவொரு சமயத்திலும் இதற்கு பாவமன்னிப்பு இல்லை என்பது அந்த அந்த வேதங்களில் சொல்லப்பட்டுள்ளது. இதற்குரிய தண்டனையை காலம் கடந்தாவது அனுபவித்தாகவேண்டும். பரிகாரம் இல்லை. இந்தியா தமிழர்களை நம்;பவைத்து ஆயுதம் கொடுத்து சுதந்திரம் கேட்கச்சொல்லிப் பின்னர் தமிழர்களுக்கே சிங்களவனுக்கு கோடி கோடியாகக் கொட்டி இரகசியமாகப் போரில் பின்னின்று 70.000 தமிழர்களையும் ஒரே நாளில் தடைசெய்யப்பட் இரசாயனக்குண்டுகளை வீசி அழித்த நரித்துரோகத்தனம் இரகசியமானது அல்ல அப்பட்டமானது. சிங்களவனுடன் ஒன்று சேர்ந்தாலும் இவர்களுடன் ஒன்று சேர்வது. கழுத்தைக் கொண்டு போய் வாளுக்கு வைப்பதைப்போன்றது. தன்னுடைய மாநிலமான தமிழ்நாட்டுத் தமிழர்களின் கூக்குரலையும் மீறி சிங்களத்திற்கு உதவிய இந்தி, தமிழ்நாட்டை ஒரு பொருட்டாகக் கருதாதது. தமிழ்நாட்டை ஒரு இழிகுலத்திலும் கேவலமாகக்கருதியதாக நான் நினைக்கின்றேன். ஈதனால் தான் மானமுள்ள தமிழன் முத்துக்குமார் தனக்குத்தீயிட்டான். காந்தீயம் பிறந்தநாட்டில் காந்தீயத்துக்கே இடமில்லை. ஆனால் காந்தீயம் என்று வாய்கிழ
2/14/2010 12:49:00 AM