ஞாயிறு, 24 மார்ச், 2013

சிவலிங்கம் மீது சூரியஒளி விழும் கட்டட அறிவியல்

சிவலிங்கம் மீது சூரியஒளி விழும் 
கட்டட அறிவியல்
மார்ச் 23,2013Temple images
திருநெல்வேலி: திருநெல்வேலி, களக்காட்டில் கிபி 11ஆம் நூற்றாண்டில் வீரமார்த்தாண்ட மன்னரால் கட்டப்பட்டசத்தியவாகீசுவரர் -கோமதியம்மன் கோயில் உள்ளது. பிரசித்த பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் மார்ச்சு,  செப்டம்பர் ஆகிய மாதங்களில் மட்டும், மூன்று நாட்கள் மூலஸ்தானத்தில் உள்ள சிவலிங்கம் மீது சூரிய ஒளி நேரடியாக விழும் வகையில் கோயிலின் கட்டட அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களாக சூரியஒளி சிவலிங்கம் மீது விழுந்தது. நேற்று இறுதி நாளில் சூரிய ஒளி, சிவன் மீது விழுவதை தரிசிக்க பக்தர்கள் திரண்டனர். முதலில் கொடிமர மண்டபத்திலும் தொடர்ந்து கொலு மண்டபம், மணி மண்டபம் ஆகியவற்றை கடந்து சிவலிங்கத்தின் மீது வெளிச்ச கதிர்கள் விழுந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக