தமிழுக்கு முதன்மை: த. தேர்வாணையத்திற்கு த் தமிழக அரசு மடல்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
(டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழிக்கு
முக்கியத்துவம் அளிக்குமாறு தமிழக அரசு கடிதம் எழுதியிருப்பதாக பள்ளிக்
கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற 2013-14-ம் ஆண்டுக்கான பட்ஜெட்
மீதான விவாதத்தில் பேசிய மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் எம்.எச்.
ஜவாஹிருல்லா (ராமநாதபுரம்), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் அ.
சௌந்திரராசன் ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து அவர் பேசியது:
டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான பாடத் திட்டத்தில் திறனறிவுத்
தேர்வுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு தமிழ் மொழிப் பாடத்துக்கான
மதிப்பெண்கள் குறைக்கப்பட்டன. சில தேர்வுகளில் தமிழ் மொழிப் பாடம்
நீக்கப்பட்டது.
இது குறித்து அரசின் கவனத்துக்கு வந்ததும் தமிழ் மொழிப் பாடத்துக்கு
உரிய முக்கியத்துவம் அளிக்குமாறு டி.என்.பி.எஸ்.சி. தலைவருக்கு தமிழக
அரசின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக